வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்! பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் வேலை நாட்கள் குறைப்பு போன்ற கோரிக்கைகளுக்காக மத்திய அரசுடன் போராடி வரும் வங்கி ஊழியரகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

வெள்ளிக்கிழமை முதல் நடந்தது வந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 19 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வந்த வங்கி அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வும், மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்! பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!!

இதனையேற்ற வங்கி ஊழியர்கள் அமைப்பு இம்மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலான வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்த உயர்வு பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் 10 இலட்ச ஊழியர்களுக்கும், பழமையான தனியார் வங்கிகள் மற்றும் சில பன்னாட்டு வங்கிகளுக்கும் பொருந்தும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசுக்கும் வங்கி ஊழியர்களுக்குமான போராட்டத்தில் கடைசியில் வங்கி அதிகாரிகள் அமைப்பு வெற்றி பெற்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank employees get 15% wage hike; banks to be closed on 2nd, 4th Saturdays

Trade unions finally managed to get a good deal, a 15 per cent hike in wages coupled with second and fourth Saturday off from bank managements after protracted negotiations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X