வரும் ஆண்டுகளில் ஐடித் துறையில் வேலைவாய்ப்பு குறையும்!! நாஸ்காம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் துறைகளில் முதல் இடத்தில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையில் வரும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என இத்துறை அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில், இத்துறையில் 13% அல்லது 30,000 வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் என நாஸ்காம் ஆய்வு தெரிவிக்கிறது.

ஏன் இந்த நிலை??

ஏன் இந்த நிலை??

இந்திய ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர், இதனால் தேவையற்ற பல பணியிடங்கள் காலியாகும் என்றும் நிறுவனத்தின் திறன் அதிகரிக்க அனுபவம் உள்ள பணியாளர்களை அதிகளவில் சேர்க்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முற்படும் இதன் மூலம் புதிய பணியாளர்களுக்கு இத்துறையில் வாய்ப்புகள் குறையும்.

நாஸ்காம் தலைவர்

நாஸ்காம் தலைவர்

இதுக்குறித்து நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகரன் கூறுகையில், "இந்திய நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் பணியிடங்கள் குறைப்புதன் மூலம் மற்றும் புதிய தொழில்நுட்பம் மற்றும் பிளாட்பார்ம் பயன்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது."

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு

மேலும் ஆட்சேர்ப்பு குறித்து ஆர்.சந்திரசேகரன் கூறுகையில், "நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு அளவு குறையவில்லை என்றாலும் ஆட்சேப்பு முறை மற்றும் தகுதிகள் மாற்ற உள்ளன".

2016ஆம் ஆண்டு

2016ஆம் ஆண்டு

நாஸ்காம் கணிப்பின் படி 2016ஆம் ஆண்டில் இந்திய ஐடித்துறையில் 2 பணியாட்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும், இதன் அளவு 2.3 இலட்சத்திற்கு மேல் கண்டிப்பாக உயர வாய்ப்பில்லை என நாஸ்காம் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

பென்ச்

பென்ச்

மேலும் 2011-2014ஆம் நிதியாண்டுகளில் ஐடித்துறையில் பணியிடங்கள் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்லாமல் ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் குறைவாக இருந்தது. இக்காலகட்டத்தில் நிறுவனங்களில் பென்ச்-இல் இருக்கும் பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம் என நாஸ்காம் தெரிவித்தது. 2015ஆம் ஆண்டில் இந்த நிலை மாறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT sector to create 13% less jobs in FY16, says Nasscom

The pace of hiring in the information technology industry, one of India's largest job creators, is set to slow in the coming years. Industry body Nasscom estimates the sector to create 30,000, or 13%, less jobs in fiscal 2016 compared with this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X