2014-15ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை!! எகனாமிக் சர்வே

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் நடந்த பொருளாதார வளர்ச்சி குறித்த ஒரு முழுமையான ஆய்வு ஆறிக்கையை சமர்ப்பிக்கும். இந்த எகனாமிக் சர்வே அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

எப்போதும் எகனாமிக் சர்வே அறிக்கை மத்திய பட்ஜெட் வெளியிட்டுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதில் நாட்டில் நடந்த முக்கிய வளர்ச்சி மற்றும் திட்டங்களின் நிலைப்பாடுகள் விரிவான முறையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் கடந்த 12 மாதங்களில் இந்தியா பெற்ற வளர்ச்சிகளை இங்கு பார்போம்..

(ஐடித் துறையில் என்றும் தீராத பிரச்சனை இது தான்!!)(ஐடித் துறையில் என்றும் தீராத பிரச்சனை இது தான்!!)

ஜிடிபி

ஜிடிபி

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எகனாமிக் சர்வே அறிக்கையில் 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி அளவு (உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி) 8.1% - 8.5% வரை உயரும் என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்திருந்தது.

நுகர்வோர் பணவீக்கம்

நுகர்வோர் பணவீக்கம்

2015-16ஆம் நிதியாண்டில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கத்தின் அளவு 5-5.5 சதவீதமாக இருக்கும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலை சரிவு

நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது கச்சா எண்ணெய் விலை சரிவு தான். இவ்விலை சரிவால் மத்திய அரசின் செலவீணங்கள் அதிகளவில் குறைந்தது.

நாட்டின் வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சி

2015ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எகனாமிக் சர்வே அறிக்கை தெரிவித்துள்ளது.

சேவைத்துறை வளர்ச்சி

சேவைத்துறை வளர்ச்சி

நடப்பு ஆண்டில் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி கணிப்புகளுக்கும் (9.1) அதிகமான வளர்ச்சியான 10.6 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

நிலையான வளர்ச்சி

நிலையான வளர்ச்சி

மோடி அரசின் முக்கிய திட்டமான "மேக் இன் இந்தியா" திட்டத்தை "ஸ்கில்லிங் இந்தியா" திட்டத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என இந்த எகனாமிக் சர்வே அறிக்கை தெரிவித்துள்ளது.

சீர்திருத்த நடவடிக்கைகள்

சீர்திருத்த நடவடிக்கைகள்

கடந்த 12 மாதங்களில் மத்திய அரசு வங்கியியல், இன்சூரன்ஸ் மற்றும் நிதித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை நடத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது.

சிறப்பு திட்டங்கள்

சிறப்பு திட்டங்கள்

ஜன் தண் யோஜ்னா, ஆதார் மற்றும் தொலைதொடர்பு சேவையின் மூலம் நாட்டின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. மேலும் இத்தகைய திட்டங்களின் மூலம் வறுமைகோட்டிற்கு மேல் இருக்கும் மக்கள் பெரிதும் நன்மை அடைந்தனர்.

கல்வி துறை

கல்வி துறை

நாட்டில் கல்வி துறை மற்றும் அதில் உள்ள சாவால்களை தீர்த்து இத்துறை பெரிதும் வளர்த்துள்ளது. இதேபோல் பெண்களுக்கான கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கடந்த 12 மாதங்களில் கண்டுள்ளது மத்திய அரசு.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான தகுதிகளை உயர்த்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

முன்னேற்றம் அடையவேண்டிய துறைகள்

முன்னேற்றம் அடையவேண்டிய துறைகள்

மேலும் எகனாமிக் சர்வேயின் படி நாட்டின் ரயில்வே துறை, தொழில்நுட்பம் துறைகள் அதிகளவில் வளர வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

சோலார் மின்சாரம்

சோலார் மின்சாரம்

நடப்பு நிதியாண்டிஸ் நாட்டின் சோலார் மின்சார உற்பத்தி இலக்கும் 5 மடங்கு உயர்ந்து 100,000 மெகாவாட் ஆக உள்ளது. மேலும் இந்த இலக்கை எட்ட நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கட்டுமான துறை

கட்டுமான துறை

நாட்டின் முக்கிய துறைகளாக கருதப்படும் வங்கி, உற்பத்தி, மின்சாரம், ஐடி போன்ற 8 துறைகளை விட கடந்த 12 மாதங்களில் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது கட்டுமானத்துறை.

நிதி திரட்டல்

நிதி திரட்டல்

மேலும் இந்தியாவில் நிதி பற்றாக்குறையால் பல நூறு திட்டங்கள் முடங்கியுள்ளது, இதனை செயல்படுத்தவும்,விரைவில் முடிக்கவும் மத்திய அரசு நிதி திரட்டல் பணியில் அதிகளவில் கவணம் செலுத்த வேண்டும் என எகனாமிக் அறிக்கை தெரிவித்துள்ளது.

புதிய நிறுவனங்கள்

புதிய நிறுவனங்கள்

நாட்டில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களின் துவக்கம் கடந்த 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது இது நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியை காட்டுகிறது என சர்வே தெரிவித்துள்ளது.

விவசாய மார்கெட்டிங்

விவசாய மார்கெட்டிங்

மேலும் விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் விவசாய மார்கெட்டிங் செய்ய e-platform அமைக்க மத்திய அரசு சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் அன்னிய முதலீடு அளவை அதிகரிக்க மத்திய அரசு விரைவாக செய்ல பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

உணவு மானியம்

உணவு மானியம்

2014-15ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசு அளிக்கும் உணவு மானியம் 107823.75 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

மேலும் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அளவு 2012-13ஆம் நிதியாண்டின் கடைசி கலாண்டில் 6.7 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 1.0 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுடன் போட்டி

சீனாவுடன் போட்டி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீனாவுடன் போட்டிப்போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகளவில் சீனா 2வது பொருளாதார நாடாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic Survey 2014-15: Key Highlights

The Economic Survey has forecast a GDP of between 8.1% - 8.5% for FY 2015-16. The survey also sees CPI in the range of 5-5.5 per cent and has painted an overall rosy picture for the economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X