தங்கம் விலை கிராமிற்கு 38 ரூபாய் உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் மீதான வர்த்தகம் மந்தமாக இருந்தாலும், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நிலையான வர்த்தகத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் முகூர்த்த நாளான இன்று தங்கம் விலை ஒரே நாளில் 38 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

திங்கட்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 38 ரூபாய் உயர்ந்து 2,726 ரூபாயாக உள்ளது, அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 36 ரூபாய் உயர்ந்து 2,549 ரூபாயாக விற்கப்படுகிறது.

வெள்ளி

வெள்ளி

தங்கத்தை போல வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்து காணப்படுகிறது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 265 ரூபாய் அதிகரித்து 37475.00 ரூபாயாக உள்ளது.

விலை உயர்வு
 

விலை உயர்வு

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என பலரும் எதிர்பார்த்தனர், ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி எந்தவிதமான வரி குறைப்பும் செய்யவில்லை. எனவே இன்றைய தங்கம் விலை உயர்விற்கு வரி குறைப்பு செய்யாததும் ஒரு காரணமாகும்.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா சரிந்து 61.89 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இன்றைய வர்த்தகத்தில் மதியம் 1.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை 41.10 புள்ளிகள் வரை சரிந்து 29,321.26 புள்ளிகளை எட்டியது. நிஃப்டியும் குறியீடு பல சரிவுகளை சந்தித்தாலும் அதேநேரத்தில் 6.80 புள்ளிகள் உயர்வுடன் 8,910.90 புள்ளிகளை அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices to rise after budget keeps import duty high

Gold premiums in top consumer India could jump to as much as $5 an ounce over world prices next week, from being almost at par, after Finance Minister Arun Jaitley surprised jewellers by maintaining import duty at a record level in Saturday's budget.
Story first published: Monday, March 2, 2015, 14:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X