டாக்ஸி-பார்-ஸ்யூர் நிறுவனத்தை ஓலாகேப்ஸ் கைப்பற்றியது!! ரூ.1,250 கோடி டீல்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் பன்னாட்டு ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் மற்றும் பிற நிறுவனத்தின் போட்டியை எதிர்கொள்ள ஓலாகேப்ஸ் நிறுவனம் தனது சக போட்டி நிறுவனமான டாக்ஸி-பார்-ஸ்யூர் நிறுவனத்தை 1,250 கோடி ரூபாய்க்கு (200 மில்லியன் டாலர்) கையகப்பற்றியுள்ளது.

இந்த 200 மல்லியன் டாலர் பணத்தை ஓலாகேப்ஸ் நிறுவனம் ஒரு பகுதியை பணமாகவும், மற்றொரு பகுதியை நிறுவன பங்குகளாகவும் அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஓலாகேப்ஸ்

ஓலாகேப்ஸ்

இதுக்குறித்து ஓலாகேப்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் சிங்ஹால், நிறுவனத்தின் நிர்வாக குழு, மேலான்மை குழு மற்றும் நிறுவனத்தின் 1,700 பணியாளர்களும் இனி டாக்ஸி-பார்-ஸ்யூர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

டாக்ஸி-பார்-ஸ்யூர்

டாக்ஸி-பார்-ஸ்யூர்

இந்நிறுவனம் தற்போது 47 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சுமார் 15,000 வாகனங்கள் இந்நிறுவனத்தில் இணைந்து சிறப்பாக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது.

 

 

ஆலோசனை குழு

ஆலோசனை குழு

டாக்ஸி-பார்-ஸ்யூர் நிறுவனத்தின் நிறுவனர்களான அப்ரமையா ராதாகிருஷ்ணா மற்றும் ரகுநந்தன் ஆகியோர் இன்னும் சில காலத்திற்கு ஓலாகேப்ஸ்-டாக்ஸி-பார்-ஸ்யூர் கூட்டணியின் ஆலோசனை குழுவில் இடம்பெற உள்ளனர்.

உபர் நிறுவனம்

உபர் நிறுவனம்

இந்தியாவில் பன்னாட்டு டாக்ஸி நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க இந்தியா நிறுவனமான ஓலாகேப்ஸ் தன் பக்கம் வலிமைப்படுத்த டாக்ஸி-பார்ஸ்யூர் கைபற்றியுள்ளது.

இந்தியா

இந்தியா

ஓலாகேப்ஸ்- டாக்ஸி-பார்ஸ்யூர் நிறுவனங்களை இணையும் பட்சத்தில் இந்தியா ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் ஒரு புதிய புரட்சி உண்டாகும் என அமெரிக்காவின் டெம்பில் யுனிவர்சிட்டி என்னும் மேலான்மை கல்லூரியின் பேராசிரியர் சுனில் வாட்டால் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

சாப்ட்பாங்க் நிறுவனம்

சாப்ட்பாங்க் நிறுவனம்

ஓலாகேப்ஸ் நிறுவனத்தின் முதலீடு சுற்று அனைத்திலும் ஜப்பான் நிறுவனமான சாப்ட்பாங்க் நிறுவனம் இருந்து வருவது குறிப்பிடதக்கது. அதுமட்டும் அல்லாமல் டாக்ஸி-பார்ஸ்யூர் நிறுவன கைபற்றும் நடவடிக்கையில் சாப்ட்பாங்க் நிறுவனத்தின் பங்கு அதிகளவில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

பிளிப்கார்ட்- மின்திரா

பிளிப்கார்ட்- மின்திரா

ஒலாகேப்ஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமாக இருக்கும் ஜாப்பான் சாப்ட்பாங்க் நிறுவனம், டாக்ஸி-பார்ஸ்யூர் நிறுவனத்தை கைபற்றுவதில் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் சாப்ட்பாங்க் நிறுவனம் பிளிப்கார்ட்- மின்திரா டீலில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடதக்கது.

முதலீட்டு நிறுவனங்கள்

முதலீட்டு நிறுவனங்கள்

ஒலாகேப்ஸ் நிறுவனத்தில் டைகர் குளோபல், மேட்ரிக்ஸ் பார்னர்ஸ், சிகோயா கேப்பிடல், ஸ்டீட்வியூவ் கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ola buys TaxiForSure for $200 mn

Online cab aggregator Ola has acquired its competitor TaxiForSure for $200 million in a cash and equity deal. Both the companies will continue to operate as separate companies.
Story first published: Monday, March 2, 2015, 17:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X