சென்னை: சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு உயர்ந்ததால் தங்கம் விலை அதிகளவில் சரிவை சந்தித்தது. இதனால் இந்திய புல்லியன் சந்தையில் திங்கட்கிழமை உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சரிவை தழுவியது.
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 54.47 ரூபாய் குறைந்துள்ளது, இதனால் சில்லறை விற்பனையில் தங்கம் மீதான வர்த்தகம் அதிகளவில் இருந்தது.
தங்கம் விலை
24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 54 ரூபாய் குறைந்து 2660.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2492.47 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
சென்னையில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 465 ரூபாய் குறைந்து 36,950.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
நேற்று வர்த்தக முடிவில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.88 ரூபாய் என்ற நிலையில் முடிவடைந்தது. தற்போது இதன் மதிப்பு .04 பைசா உயர்ந்து 61.92 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
நகரங்கள் வாரியாக தங்கம் விலை
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
சென்னை : ரூ.25,390
ஹைதராபாத் : ரூ.25,420
பெங்களூரு : ரூ.25,410
கொல்கத்தா : ரூ.25,480
டெல்லி : ரூ.25,330
மும்பை : ரூ.25,370
கேரள : ரூ.25,390
புனே : ரூ.24,960