இந்தியாவின் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களை எண்ணத் தொடங்கினால் உங்களுக்கு ஒரு நாள் போதாது. இந்த பட்டியலில் தொழிலதிபர்கள், திரைப்படத் துறையினர்களை தொடர்ந்து அதிகளவில் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இன்றளவில் கிரிக்கெட் வீரர்கள் இந்திய மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களுடனான உறவுகளாலும் மற்றும் அந்நிறுவனங்களின் விளம்பர தூதர்களாகவும் இருந்து வருவதால் கிரிக்கெட்டில் ரன்கள் மற்றும் விக்கெட்களுடன் சேர்த்து அளவற்ற பொருட் செல்வத்தையும் குவித்து வருகின்றனர்.

இந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சொத்து மதிப்பு பற்றி நாம் தொரிந்துக்கொள்ள வேண்டாமா...

விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி

துணிச்சல் மற்றும் மிகவும் ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரரான கோஹ்லி, அவர் களத்தில் இருந்தாலே பந்து வீச்சாளர்களுக்கெல்லாம் திகில் தான்.

கிரிக்கெட் மைதானத்தில் இவர் ஆடிய ஆட்டம் தான் அவருடைய மைதானத்திற்கு வெளியிலான தொழில் முறை ஆட்டத்திற்கும் கைகொடுத்துள்ளது. இதன் காரணமாகத் தான் பல்வேறு நிறுவனங்களும் இவரை தங்களுடைய பங்குதாரர்களில் ஒருவராக வைத்துள்ளன.

இந்த பட்டியலில் சுமார் 15 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9-வது இடத்தைப் பெற்றுள்ளார் விராட் கோஹ்லி.

 

கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீர்

இவர் அணியிலிருந்து கழட்டி விட்டு விட்டாலும், இன்னமும் வெளி மார்க்கெட்டில் 'நாட் அவுட்' ஆக தான் உள்ளார். பல ஆண்டு காலமாக அவர் பெற்ற ரசிகர்களும் மற்றும் பிராண்ட் மதிப்பும் அவருடைய நிதி இடைவெளியை வெகுவாக குறைத்து வைத்துள்ளது. இரண்டு முறை ஐபிஎல் போட்டிகளை வென்ற அணியின் கேப்டனாக இருப்பதுவும் இவருடைய சந்தை மதிப்பு மேலே சென்றதற்கு காரணமாகும்.

20 மில்லியன் டாலர் மதிப்புடன் இப்பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளார்.

 

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

மிஸ்டர் டிபெண்டபிள் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அவருடைய முத்திரை இன்னமும் நிலையாக உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இராஜஸ்தான் இராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும், வழிகாட்டுபவராகவும் உள்ளார்.

அவர் இந்த பட்டியலில் 22.6 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7-வது இடத்தில் உள்ளார்.

 

யூசுப் பதான்

யூசுப் பதான்

இந்திய கிரிக்கெட் அணியில் குறைந்த காலமே இருந்தாலும், யூசுப் பதானின் பெயரும் கோடீசுவர கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் 26.5 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6-வது இடத்தைப் பெற்றுள்ளார் பதான்.

 

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்த ஆண்டின் ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியினால் 16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார் யுவராஜ் சிங்.

அவருடைய சாதனைகள் தான் அவருடைய ஸ்திரத்தன்மைக்கான மற்றொரு வழியாக உள்ளன. உயர்தட்டு வட்டாரங்களில் அவருக்கு இருக்கும் இமேஜ் தான் பல்வேறு நிறுவனங்களும் அவரை அணுகுவதற்கான காரணமாகும்.

இந்த பட்டியலில் 35.5 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5-வது இடத்தில் உள்ளார் யுவராஜ் சிங்

 

வீரேந்தர் சேவாக்

வீரேந்தர் சேவாக்

இந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் இந்திய அணியில் இல்லாது போனலும், மைதானத்தில் அவர் காட்டிய பேட்டிங் ஸ்டைலை யாரும் இன்னமும் மறந்திடவில்லை. இன்றும் கூட மீடியாவின் பார்வையைக் கவரும் வகையில் உள்ள வீரராகவும் மற்றும் பல்வேறு பிராண்ட்களின் சாய்ஸ் ஆகவும் சேவாக் உள்ளார்.

45 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இவர் 4-வது இடத்தில் உள்ளார்.

 

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

ஒரு மேட்சை வெல்லும் அதிர்ஷடமாகட்டும் அல்லது நிறுவனத்தின் வியாபாரமாகட்டும் 'தோனி' என்ற பெயர் ஒன்றே போதும். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக கோப்பையை பெற்றுத் தந்தவர் என்ற வகையில் அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார். அவருடைய சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பட்டியலில் 51 மில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார் தோனி.

 

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

கல்கத்தாவின் இளவரசர் என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்காலின் நிர்வாக குழுவிலும், தொலைக்காட்சி வர்ணணையாளராகவும் மற்றும் செய்தி ஒளிபரப்பு தொலைக்காட்சிகளில் பணி செய்பவராகவும் உள்ளார்.

இந்த பட்டியலில் 55.5 டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் கங்குலி.

 

சச்சின் டெண்டுல்கள்

சச்சின் டெண்டுல்கள்

இவரைத் தவிர வேறு யாரால் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முடியும். இவருடைய பிரபலத்திற்கு எல்லையில்லை - அதுவும் உலகெங்கிலும்.

இவருடைய பிரபலத்தையும், பிராண்ட் மதிப்பையும் வெறுமனே குறிப்பிட்டு விட முடியாது. ஏனெனில் டெண்டுல்கர் கடல் போன்ற ரசிகர்களைக் கொண்டவர் ஆவார். தோஷிபா, அடிடாஸ் மற்றும் அவருடைய ரெஸ்டாரண்ட் பிஸினஸ் என பல்வேறு தொழில்கள் அவரிடம் கைவசம் உள்ளன.

சுமார் 115 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளார் சச்சின்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's 9 Richest Cricketers, Sachin Tops List

If you count the number of people who are ‘crorepati’s in India, you can find many. The business tycoons top the list next followed by people from film industry and there are also cricketers in it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X