9,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தில் நிஃப்டி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடனே துவங்கினாலும், அடுத்த சில மணி நேரங்களில் பங்குச்சந்தையில் வர்த்தகம் சூடுபிடிக்க துவங்கியது. இதன் எதிரொலியாக நிஃப்டியில் இதுவரை எட்டாத 9,000 புள்ளிகள் என்ற நிலையை எட்டியுள்ளது நிஃப்டி உள்ளது.

மேலும் இன்றைய வர்த்தக உயர்விற்கு முக்கிய காரணமாக விளங்கியது மத்திய அரசு வெளியிட்ட நிலையான பட்ஜெட் அன்னிய முதலீட்டாளர்களை அதிகளவில் கவர்ந்தது தான். இன்றைய வர்த்தகத்தில் சந்தையில் அதிகப்பிடியான அன்னிய முதலிடு செய்யப்பட்டுள்ளது என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 134.59 புள்ளிகள் உயர்ந்து 29,593.73 புள்ளிகளை எட்டியுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

நிஃப்டியில் 3 மணியளவில் சந்தை 52 புள்ளிகள் வரை உயர்ந்து 9,006 புள்ளிகளை அடைந்தது. சந்தை முடியும் நேரத்தில் 39.50 புள்ளிகள் உயர்வுடன் 8,996.25 புள்ளிகள் உயர்வுடன் 8996.25 புள்ளிகளை எட்டி சந்தை முடிவடைந்தது.

லாபம் அடைந்த நிறுவனங்கள்

லாபம் அடைந்த நிறுவனங்கள்

மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ், டிசிஎஸ், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி, sesa sterlite, டாடா பவர், விப்ரோ, ஹிரோ மோட்டோ கார்ப் போன்ற நிறுவனங்கள் 1 சதவீத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கண்டது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

இதில் ரிலையன்ஸ் மற்றும் டிசஎஸ் நிறுவனங்கள் சுமார் 4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

சரிவில் கோல் இந்தியா

சரிவில் கோல் இந்தியா

இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஐடிசி போன்ற நிறுவனங்கள் சரிவை தழுவியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex jumps 162 points; Nifty hits record high of 9,006

The broader NSE index rose to a record high on Tuesday led by gains in Reliance Industries after CLSA said the conglomerate could report a record profit for the fourth quarter, while hopes of higher weightage in the MSCI index also helped.
Story first published: Tuesday, March 3, 2015, 16:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X