வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி 9,006 புள்ளிகள் எட்டிய நிலையில், புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 29,889.28 புள்ளிகள் அடைந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 9,073 புள்ளிகள் வரை உயர்ந்து நேற்றை அளவைவிட புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகம் துவக்கத்திலேயே உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் 29,987 புள்ளிகளை முதல் முறையாக எட்டியது. இதன் பின் 10 மணியளவில் ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பு செய்திகள் பங்குச்சந்தையை நிலையான வர்த்தகத்திற்கு ஈட்டுச் சென்றது. இதனால் சென்செக்ஸ் 278.74 புள்ளிகள் உயர்ந்து 29,872.47 புள்ளிகளை தற்போது எட்டியுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

நேற்றை வர்த்தக முடிவில் நிஃப்டி 9006 புள்ளிகள் எட்டிய நிலையில் இன்று வர்த்தக துவக்கத்தில் நிஃப்டி குறியீடு 9096 புள்ளிகள் வரை உயர்ந்தது. தற்போது 70.80 புள்ளிகள் உயர்வுடன் 9,067.05 புள்ளிகளை எட்டியுள்ளது.

 வங்கித்துறை பங்ககுள்

வங்கித்துறை பங்ககுள்

ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பால் மும்பை பங்குச்சந்தையில் வங்கித்துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 260.20 புள்ளிகள் வரை உயர்ந்து 20,222 புள்ளிகளை எட்டியுள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மத்திய பட்ஜெட் வெளியிட்ட முன்றாவது நாள் ரிசர்வ் வங்கி புதன்கிழமை வங்கிகளுக்கும் அளிக்கப்படும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை 7.75 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளருக்கும் அளிக்கப்படும் வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றில் வட்டிக் குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டிக் குறைப்பு

வட்டிக் குறைப்பு

ரிசர்வ் வங்கி கடந்த முறை அறிவித்த வட்டிக் குறைப்பிற்கு இரண்டு பொதுத்துறை வங்கிகள் மட்டுமே வட்டி வகிதங்களை குறைத்தது. தனியார் வங்கிகளும் பிற பொதுத்துறை வங்கிகளும் எந்தவிதமான வட்டி வகிதத்தை குறைக்கவில்லை. இம்முறை மக்கள் அதிகளவிலான வட்டி வகித குறைப்பு எதிர்பார்த்து உள்ளனர்.

சி.ஆர்.ஆர் வகிதம்

சி.ஆர்.ஆர் வகிதம்

மேலும் வங்கிகள் பெறும் டெப்பாசிட் தொகையில் ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்படும் வைப்பு அளவை மாற்றாமல் 4 சதவீதமாக அறிவித்துள்ளது.

கணிப்புகள்

கணிப்புகள்

சந்தை கணிப்புகளின் படி அடுத்த 3 வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருந்தால் ரிசர்வ் வங்கி சுமார் 1.25% வரை வட்டிக்குறைப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 0.25 சதவீத குறைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

லாபம் அடைந்த நிறுவனங்கள்

லாபம் அடைந்த நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் பொரும்பாலான அனைத்து நிறுவனங்களும் சிறப்பான வர்த்தகத்தை பெற்று உயர்வில் உள்ளது. இதில் சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, சிப்லா, ஸ்டேட் வங்கி, ஹிரோ மோட்டோ கார்ப் போன்ற நிறுவனங்கள் உள்ளது.

நஷ்டம் அடைந்த நிறுவனங்கள்

நஷ்டம் அடைந்த நிறுவனங்கள்

புதன்கிழமை வர்த்தகத்தில் ஐடித்துறை நிறுவனங்கள் சரிவை தழுவியுள்ளது. இதில் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது. அதுமட்டும் அல்லாமல் எல்&டி, கோல் இந்தியா, கெயில், டாடா பவர் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Hits 30,000 For First Time on RBI Rate Cut

The Sensex and Nifty registered fresh lifetime high levels in trades on Wednesday bolstered by a surprise repo rate cut by the Reserve Bank of India. The 50-share Nifty opened 120 points higher at 9,116 and the BSE benchmark Sensex surged 431 points to 30,015.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X