அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் 2 நாள் கூட்டம் நாளை துவக்கம்.. சரிவில் சென்செக்ஸ் குறியீடு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்காவில் அதிகளவிலான வேலைவாய்ப்பு, வலிமையான நாணய மதிப்பு போன்ற காரணங்களால் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு குறித்த 2 நாள் கொள்கை மறுஆய்வு கூட்டத்தை செவ்வாய்கிழமை துவங்குகிறது.

இதன் எதிரொலியாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியான ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இந்திய சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவை தழுவினாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 4 மணியளவில் 65.57 புள்ளிகள் சரிவைடைந்து 28,422 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்தது. இதில் டிசிஎஸ், ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் குறைந்த அளவிலான உயர்வை மட்டுமே சந்தித்து. வர்த்தம் முடியும் நேரத்தில் 14.60 புள்ளிகள் சரிவுடன் 8,633.20 புள்ளிகளை எட்டியது.

லாபமடைந்த நிறுவனங்கள்

லாபமடைந்த நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், பெல், டாடா பவர், சன் பார்மா, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியையும், ஹீரோ மோட்டோ கார்ப், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ,ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது.

சரிவைடைந்த நிறுவனங்கள்

சரிவைடைந்த நிறுவனங்கள்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பலவும் சரிவை சந்தித்தது. இதில் டாடா ஸ்டீல், மாருதி, டிசிஎஸ், ரிலையன்ஸ், எல்&டி, சிப்லா, ஐடிசி, டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎஃப்சி, கெயில், என்டிபிசி, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சரிவை தழுவியது.

சந்தை முதலீடு

சந்தை முதலீடு

மேலும் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தையின் டாப் 9 நிறுவனங்கள் 83,209 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்தது. இதில் ஐடித்துறையின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

இன்றைய வர்த்தகத்தில் ஹாங்காங், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், யுகே ஆகிய அனைத்து சந்தைகளும் உயர்வுடனே காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex hits over one-month low ahead of Fed meet

The BSE Sensex fell on Monday, hitting its lowest in more than one month on profit-taking in stocks heavily owned by foreign investors ahead of the U.S. Federal Reserve's two-day policy meet starting on Tuesday.
Story first published: Monday, March 16, 2015, 16:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X