பிரதமரின் பெண் குழந்தை கல்வி திட்டம்: தமிழ்நாட்டை விட கர்நாடகம் முன்னிலை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை முறை மேம்பட மத்திய அரசு அறிவித்த சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 1.80லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், அதிகப்படியான கணக்குகளை திறக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், கர்நாடகா முதல் இடத்திலும் உள்ளது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் திட்டமான "பேட்டி பசாவ் பேட்டி படாவ்" என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை துவக்கிவைத்தார்.

9.1% வட்டி வருமானம்

9.1% வட்டி வருமானம்

இத்திட்டத்தில் வைப்பு வைக்கப்படும் தொகைக்கு 9.1% வட்டி வருமானமும், வரி சலுகையும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு இரண்டாவது இடம்

தமிழ்நாடு இரண்டாவது இடம்

நிதி அமைச்சகம் அளித்த தகவலின் படி இத்திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலத்தில் 56,471 கணக்குகளும், தமிழ்நாட்டில் 43,362 கணக்குகளும், ஆந்திர பிரதேசத்தில் 15,877 கணக்குகளும் துவங்கப்பட்டுள்ளது.

பீகார்

பீகார்

பீகார் மாநிலத்தில் குறைந்தபட்சமாக 204 கணக்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கேரளத்தில் 222 கணக்குகளும் மேற்கு வங்காளத்தில் 334 கணக்குகளும் திறக்கப்பட்டிருப்பதாக இத்தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

பிற மாநிலங்கள்

பிற மாநிலங்கள்

தேசிய தலைநகர் டெல்லியில் 2,054 கணக்குகளும், ஹரியானாவில் 4,177 கணக்குகளும், உத்தர பிரதேசத்தில் 7,620 கணக்குகளும் திறக்கப்பட்டிருக்கின்றன.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா

இத்திட்டத்தின் விவரப்படி, சுகன்யா சம்ரித்தி கணக்கு 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் குறைந்த பட்ச தொகை ரூ.1000 கொண்டு துவங்லாம். ஒரு நிதியாண்டில் அதிக பட்சமாக ரூ.1.5லட்சம் செலுத்தலாம். இத்திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1.8 Lakh A/Cs Opened Under Sukanya Scheme In 2 Mths Of Launch

As many as 1.80 lakh accounts have been opened under ‘Sukanya Samridhi Scheme’ in less than two months of launch of the special programme for girl child, with the maximum number of accounts in Karnataka and the least in Bihar.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X