ஒரு வருடத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள்... இது தான் எங்க டார்கெட்! - ப்ளிப்கார்ட்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஈகாமர்ஸ் துறையில் மட்டும் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதுபிளிப்கார்ட் நிறுவனம்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், 2015ஆம் நிதியாண்டில் ஈகாமர்ஸ் சந்தை மற்றும் அதன் இணை சேவை துறைகளின் மூலம் இந்த இலக்கு சாத்தியம் என்று அடித்துச் சொல்கிறது.

வேகமான வளர்ச்சி

வேகமான வளர்ச்சி

இந்திய மக்கள் மத்தியில் ஈ-காமர்ஸ் சந்தையின் மீது மிகுந்த நம்பிக்கை வளர்ந்துள்ளதால், இத்துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் துறையின் விரிவாக்கத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 5 லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 2015ஆம் நிதியாண்டில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற இலக்கை எட்டிவிடுவோம் என பிளிப்கார்ட் நம்புகிறது.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

கடந்த சில வருடங்களில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியில் ஈ-காமர்ஸ் துறைக்கு முக்கிய பங்கு உண்டு.

இத்துறையின் மூலம் வேலைவாய்ப்புகள், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அன்கிட் நகோரி தெரிவித்தார்.

 

75,000 வேலை வாய்ப்புகள்

75,000 வேலை வாய்ப்புகள்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் இணைந்துள்ள விற்பனையாளர்கள், புதிய வியாபார முயற்சியில் ஈடுப்பட்டு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய வருகின்றனர்.

இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் கொள்முதல், விற்பனை, பேக்கேஜிங் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளதால் கடந்த ஒரு வருடத்தில் 75,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

 

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இந்நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் 2015ஆம் ஆண்டில் பணியாளர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பு செய்யச் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart to create 2 million jobs in 2015

Flipkart, India’s largest e-commerce marketplace, is to create more than 2 million jobs through its marketplace and ancillary services in 2015. Last year, over half-a-million jobs were created in the e-commerce space alone.
Story first published: Wednesday, March 25, 2015, 16:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X