பங்குச் சந்தையில் குதிக்க வரிசை கட்டி நிற்கும் நிறுவனங்கள்.. வெல்லப் போவது யார்?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பொருளாதாரம் அதிகளவிலான அன்னிய முதலீட்டுடன் வேகமான வளர்ந்து வரும் நிலையில்,பங்குச்சந்தையில் குதித்து முதலீட்டை திரட்ட இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் 12க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இறங்குவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளது.

இதில் கத்தோலிக் சிரியன் வங்கி, அமர் உஜாலா பதிப்பகம் மற்றும் பிரபாத் டைரி ஆகிய நிறுவனங்கள் அடக்கம்.

3,000 கோடி ரூபாய்

3,000 கோடி ரூபாய்

மத்திய அரசின் நிலையான வர்த்தகத் திட்டங்களின் மூலம் இந்திய சந்தையில் அந்நிய முதலீடுகள் குவித்த வண்ணம் உள்ளது.

2014-15ஆம் நிதியாண்டில் சந்தையில் இறங்கிய நிறுவனங்கள் சுமார் 3,019 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பெரிய நிறுவனங்கள் எதுவும் சந்தையில் இறங்கவில்லை என்றாலும் சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.

 

ஐநாக்ஸ்

ஐநாக்ஸ்

கடந்த வரும் சந்தையில் அதிகளவில் நிதி திரட்டிய நிறுவனங்களில் ஐநாக்ஸ் வின்ட் முன்னணிலை வகிக்கிறது. இந்நிறுவனம் சுமார் 1,020 கோடி ரூபாய் சந்தையில் இருந்து முதலீடாகப் பெற்றுள்ளது.

செபி

செபி

பங்குச்சந்தையில் இறங்குவதற்காக நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தப்பின்னர், தனது முடிவுகளைச்செபி வெளியிடும்.

103 நிறுவனங்கள்
 

103 நிறுவனங்கள்

செபி அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் 2009ஆம் வருடத்தில் இருந்து இன்று வரை சுமார் 103 நிறுவனங்களுக்குப் பங்குச்சந்தையில் இறங்குவதற்காக அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Companies queue up for IPOs as markets rally

With the stock markets remaining on a strong wicket, companies are finally getting into IPO (initial public offering) mode. Nearly a dozen companies have filed draft offer documents with market regulator Sebi in the last one month for launching IPOs.
Story first published: Monday, April 13, 2015, 14:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X