இந்தியா மேல இவ்வளவு நம்பிக்கையா? கண்ணு கலங்குது தலைவா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: 2017ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஜிடிபி 8 சதவீதத்தை எட்டும் அளவிற்குச் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என உலக வங்கி கூறுகிறது.

பிரதமர் மோடி 9 நாள் பயணமாகப் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உலக வங்கி இந்தியாவில் ஜிபிடி 8 சதவீதத்தை எட்டும் எனத் தெரிவித்துள்ளது.

மோடிக்கு இந்த ஒரு பாயின்ட் போதாதா, உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களை இந்தியாவிற்குக் கொண்டு வர!

சாதகமான சூழ்நிலை

சாதகமான சூழ்நிலை

மத்திய அரசு செயல்படுத்த உள்ள விரிவாக்க திட்டங்கள், குறைவான எண்ணெய் விலை மற்றும் தென் ஆசியா பகுதியில் நிலவும் சாதகமான பொருளாதார நிலை ஆகியவை 2017ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தை எளிதாகஎட்டியவிடும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கணிப்புகள்

மத்திய அரசின் கணிப்புகள்

மத்திய அரசின் கணிப்புகளின் படி 2015ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவில் ஜிடிபி 8.2 சதவீதத்தை எட்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த இலக்கை அடைய அரசு அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறது.

முதலீட்டு அளவு

முதலீட்டு அளவு

2016-18ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இந்திய சந்தையில் முதலீட்டு அளவு 12 சதவீத அளவிற்கு உயர்வு பெறும் என உலகவங்கி தெரிவித்துள்ளது.

சீனா

சீனா

இந்திய சந்தையின் வளர்ச்சிக் காலத்தில், முதலீடு அதிகரிக்கும் போது சீனாவின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கும் எனஉலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் விலை

எண்ணெய் விலை

இந்தியாவின் வர்த்தக நிலைக்கு மிகவும் சாதகமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் நாட்டின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடை நீங்கியுள்ளது என உலக வங்கி கூறுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

கச்சா எண்ணெய் விலை குறைவு, முதலீடு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's GDP growth rate to reach 8 per cent by 2017: World Bank

The World Bank has predicted a GDP growth rate of 8 per cent for India by 2017 and said that a strong expansion in the country, coupled with favorable oil prices, would accelerate the economic growth in South Asia.
Story first published: Tuesday, April 14, 2015, 12:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X