ஆண்டுக்கு 525 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: மென்பொருள் துறையில் மூடிச்சூடா மன்னனாகத் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா ஆண்டுக்கு 525 கோடி ரூபாய் (84.3 மில்லியன்) சம்பளத்துடன் அமெரிக்காவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் சீஇஓவாக உருவெடுத்துள்ளார்.

 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோர் நிறுவன பொறுப்புகளில் விலகியதால், இந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகக் கடந்த ஆண்டுப் பிப்ரவரி 4ஆம் தேதிநியமிக்கப்பட்டார்.

முதல் இடத்தில் சத்ய நாடெல்லா

முதல் இடத்தில் சத்ய நாடெல்லா

கடந்த வருடம் இந்த இடத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவரான லேரி எலிசன் இருந்தார். தற்போது இந்த இடத்தை இந்தியாரான சத்ய நாடெல்லா பிடித்துள்ளதாக ஈஃவிலார் தெரிவித்துள்ளது. ஈஃவிலார்... அது யாரு?.

 ஈஃவிலார்

ஈஃவிலார்

அமெரிக்காவே சேர்ந்த ஈஃவிலார் என்னும் ஆய்வு நிறுவனம் 100 சீஇஓ பே ஸ்டெடி என்னும் பெயரில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் அமெரிக்காவில் இருக்கும் டாப் 100 நிறுவனங்களின் வருவாய், பணியாளர்களின் வாழ்க்கைமற்றும் சம்பளம் ஆகியவற்றை இந்நிறுவனம் ஆய்வு செய்தது.

மற்றொரு இந்தியர்

மற்றொரு இந்தியர்

இப்பட்டியலில் மற்றொரு இந்தியரும் இடம்பெற்றுள்ளார், பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி 19.08மில்லியன் டாலர் சம்பளத்துடன் இப்பட்டியலில் 19வது இடத்தில் உள்ளார்.

கடைசி இடத்தில் யார் தெரியுமா
 

கடைசி இடத்தில் யார் தெரியுமா

உலகின் டாப் முன்று பணக்காரர்களின் ஒருவரான வாரன் பஃபெட் இப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். சொத்து மதிப்பில் இவர் முதல் இடத்தில் இருந்தாலும், சம்பளத்தில் கடைசி இடத்தில் உள்ளார்.

டாப் 3 இடங்கள்

டாப் 3 இடங்கள்

இப்பட்டியலில் சத்ய நாடெல்லா 84.3 மில்லியன் டாலர் பெற்று முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் லேரி எலிசன்(67.3 மில்லியன் டாலர்), மூன்றாவது இடத்தில் ஸ்டீவன் மோலென்காப் (60.7 மில்லியன் டாலர்) ஆகியோர் டாப் மூன்று இடத்தில் உள்ளனர்.

சராசரி சம்பளம்

சராசரி சம்பளம்

ஈஃவிலார் ஆய்வின் முடிவில் அமெரிக்காவின் டாப் 10 நிறுவனங்களின் சீஇஓக்களுக்குச் சராசரியாக 14.3 மில்லியன் டாலர்சம்பளம் கிடைக்கிறது. இந்த வருடம் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் 5 சதவீத ஊதிய உயர்வை பெற்றுள்ளார்கள் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

பெண்கள் - சத்ய நாடெல்லா

பெண்கள் - சத்ய நாடெல்லா

அமெரிக்காவில் நடந்த ஒரு கூட்டத்தில் நாடெல்லா பெண்களை பற்றி தவறான கருத்துக்களை கூறி பின்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதை பற்றி தெரிந்துக்கொள்ள..

"பெண்கள் சம்பள உயர்வு எல்லாம் கேட்க கூடாது" சத்யா பேசும் பேச்சைப் பாருங்க!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian-origin Satya Nadella tops global CEO pay chart: Study

With a pay package of $84.3 million (Rs 525 crore) a year, technology firm Microsoft's Indian-origin chief Satya Nadella has emerged as the top-paid CEO in the US, as per a new list.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X