'சீட்டை விட்டு இறங்க மாட்டேன்'... அடம் பிடிக்கும் விஜய் மல்லையா!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் புதிய பார்ட்னரான டியாஜியோ, நிறுவன வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக முதலீடு செய்த தொகையை, இந்நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது கிங்பிஷர் மற்றும் பிற நிறுவனங்களுக்கு முறைகேடாகக் கொடுத்துவிட்டார்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் மல்லையாவை தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு டியாஜியோ வலியுறுத்தியும், இறங்க முடியாது என்று அடம்பிடிக்கிறார்.

டியாஜியோ என்டரி...

டியாஜியோ என்டரி...

தரை தட்டி நின்ற யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கத்திலும் டியாஜியோ, பல கட்ட முதலீடுகள் மூலம் சுமார் 25.02 சதவீத பங்குகளைக் கைபற்றி நிர்வாகக் குழுவில் இடம்பெற்றது.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

டியாஜியோ முதலீடு செய்த 1,337 கோடி ரூபாயை விஜய் மல்லையா தனது குழும நிறுவனங்களான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் பிற நிறுவனங்களுக்கு முறையற்ற வகையில் தாரை வார்த்துவிட்டார்.

சிறப்புக் குழு

சிறப்புக் குழு

மல்லையாவின் இந்தச் செயலைக் கண்டித்து, டியாஜியோ நிறுவனம் நிர்வாகக் குழுவிற்குள்ளேயோ ஒரு சிறப்புக் குழுவை அமைத்து அவரிடம் விசாரணை துவங்கியது.

1,337 கோடி ரூபாய்

1,337 கோடி ரூபாய்

கடந்த 2010-13ஆம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் பல பரிமாற்றங்களின் மூலம் விஜய் மல்லையா தலைமையிலான நிர்வாகம், பணத்தை முறையற்று கையாண்டது தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகாரிகள் வெளியேற்றம்

அதிகாரிகள் வெளியேற்றம்

விசாரணையைத் துவங்கிய சில நாட்களில் இந்த விவகாரத்தில் தொடர்புள்ள பல உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 25

ஏப்ரல் 25

இந்த விசாரணையின் முழுமையான ஆய்வறிக்கை கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிர்வாகக் குழுவிற்கு சிறப்புக் குழு சமர்ப்பித்தது.

தலைவர் பதவியில் இருந்து விலகுங்க

தலைவர் பதவியில் இருந்து விலகுங்க

விஜய் மல்லையா மீதான குற்றங்கள் நிரூபணமானதால், அவர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியது டியாஜியோ.

மல்லையா பதில்..

மல்லையா பதில்..

குற்றங்கள் சரியான மற்றும் முழுமையான சாட்சியங்கள் கொண்டு நிரூபிக்கப்படவில்லை, இதனால் தலைவர் பதவியில் இருந்து விலக முடியாது என்று மல்லையா கூறிவிட்டார்.

அடுத்த என்ன செய்யலாம்?

அடுத்த என்ன செய்யலாம்?

இதனால் டியாஜியோ அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளது. அடுத்தச் சில நாட்களில் பரபரப்பான காட்சிகள் யுனைடட் ஸ்பிரிட்ஸில் அரங்கேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diageo asks Mallya to quit USL board; alleges fund diversion

Alleging fund diversion to Kingfisher and other UB group entities, United Spirits’ new owner Diageo has asked Vijay Mallya to step down as Chairman and Director of the Indian liquor firm, a demand he out rightly rejected.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X