போலித் திட்டங்களால் 6 கோடி மக்களின் ரூ.80,000 கோடி பணம் முடக்கம்: சி.பி.ஐ

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சிபிஐ விசாரணையின் மூலம் முடக்கப்பட்டப் போலியான முதலீட்டுத் திட்டங்களில் சுமார் 6 கோடி இந்திய மக்களின் 80,000 கோடி பணம் முடங்கியுள்ளதாக மத்திய புலனாய்வு துறையின் (CBI) தலைவர் அனில் சின்ஹாகூறியுள்ளார்.

சந்தையில் போலி முதலீட்டுத் திட்டங்களைப் போன்சி திட்டம் என்று அழைக்கப்படும்.

இந்தியாவில் மத்திய அரசிடம் இருந்து முறையான அங்கீகாரம் பெறாமல், சில நிறுவனங்கள் பல முதலீட்டு மற்றும் சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதனைக் கண்டறிந்த சிபிஐ இத்தகைய நிறுவனங்களையும், நிறுவன கணக்குகள் மற்றும் திட்டங்களை முடக்கியுள்ளது.

முடங்கிய திட்டங்கள்

முடங்கிய திட்டங்கள்

சிபிஐயின் மூலம் முடக்கப்பட்ட போன்சி திட்டங்களில், 6 கோடி வாடிக்கையாளர்களின் 80,000 கோடி ரூபாய் பணம் முடங்கியுள்ளதாகச் சிபிஐ துறையின் தலைவர் அனில் தெரிவித்துள்ளார்.

85 வது இடத்தில் இந்தியா

85 வது இடத்தில் இந்தியா

2014ஆம் வருடத்தில் 178 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் ஊழல் குறியீட்டு வெளியிடப்பட்டது. இதில் ஊழல்நிரம்பிய இந்தியாவிற்கு 85வது இடம் கிடைத்துள்ளது. (இந்தக் கணக்கெடுப்பிலும் ஊழல் இருக்குமோ..)

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

நாட்டின் பொருளாதாரத்திற்கும், வங்கி துறைக்கும் மிகப்பெரிய தலைவலியாக விளங்கும் செயல்படா சொத்துக்களின் மதிப்பு 2007ஆம் ஆண்டில் ரூ.50,000 கோடியில் இருந்து 2014ஆம் ஆண்டில் 2.45 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய முயற்சி

புதிய முயற்சி

நாட்டின் நிதி மோசடி மற்றும் நிதி துறை சார்ந்த குற்றங்களைக் குறைக்கவும், தடுக்கவும், சுமார் 555 சிபிஐ அதிகாரிகளுக்கு ஐஐஎம் பெங்களூரு மற்றும் நேஷ்னல் சட்டக் கல்லூரியுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனச் சின்ஹா தெரிவித்தார்.

டெக்னாலஜி

டெக்னாலஜி

நாட்டின் குற்றங்களைத் தடுக்கவும், உரிய முறையில் கண்டறியவும் தொழில்நுட்பத்தின் சேவையைப் பயன்படுத்த புதிய தடய அறிவியல் ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளோம் எனவும் சின்ஹா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.80,000 crore of six crore people locked up in Ponzi schemes probed by CBI

Central Bureau of Investigation Director Anil Sinha on Monday said over Rs.80, 000 crore belonging to six crore people is locked up in the Ponzi schemes being probed by the agency.
Story first published: Tuesday, April 28, 2015, 15:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X