ஆடை விற்பனையை மேம்படுத்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஆதித்தியா பிர்லா!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தில் ஒன்றான ஆதித்தியா பிர்லா குழுமம், தனது ஆடை விற்பனை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இத்துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததுள்ளது.

நிறுவன இணைப்பு

நிறுவன இணைப்பு

இத்திட்டத்தின் படி ஆதித்தியா பிர்லா குழுமத்தின் ஆடை தயாரிப்பு துறையின் ஹோல்டிங் நிறுவனமான ஆதித்தியா பிர்லா நுவோ நிறுவனத்தில் இருந்து மதுரா கார்மென்ட்ஸ் லைப்ஸ்டைல் ரீடைல் லிமிடெட் நிறுவனத்தைப் பிரிக்கப்படஉள்ளது.

பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட்

பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட்

இப்பிரிக்கப்பட்ட மதுரா கார்மென்ட்ஸ் நிறுவனத்தைப் பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட் நிறுவனத்துடன் இணைக்கஆதித்தியா பிர்லா குழும நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஒப்புதல்களைத் திங்கட்கிழமை காலையில் நிர்வாகக் குழு அளித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

இரு நிறுவனங்களின் இணைப்பின் பின் இந்நிறுவனத்தை ஆதித்தியா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் லிமிடெட்நிறுவனமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

பங்குகள்

பங்குகள்

நிறுவன பிரிப்பு மற்றும் இணைப்புத் திட்டத்தில், ஆதித்தியா பிர்லா நுவோ நிறுவன பங்குதாரர்களுக்கு 5 பங்குகளுக்கு 26பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட் நிறுவன பங்குகளை அளிக்க உள்ளது.

அதேபோல் மதுரா கார்மென்ட்ஸ் நிறுவன பங்குதாரர்களுக்கு 500 பங்குகளுக்கு 7 பேன்டலூன்ஸ் பேஷன் மற்றும் ரீலைட்நிறுவன பங்குகளை அளிக்க அதித்தியா பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது.

 

ரூ.5,300 கோடி

ரூ.5,300 கோடி

இப்புதிய இணைப்பின் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 5,290 கோடியாக உயரும். மேலும் இந்நிறுவனம் இந்தியாமுழுவதும் சுமார் 1,869 கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதனால் மக்களுடனான நேரடி வர்த்தகத்தில் இந்நிறுவனம் அதிகளவிலான லாபத்தைப் பெறும்.

 

விரிவாக்கம்

விரிவாக்கம்

இந்த நிறுவன இணைப்பின் மூலம் இப்புதிய கூட்டணியின் வர்த்தகம் மற்றும் கிளைகளை எளிமையாகவும் விரைவாகவும்விரிவாக்கம் செய்ய முடியும் என இக்குழுமம் நம்புகிறது.

மதுரா கார்மென்ட்ஸ்

மதுரா கார்மென்ட்ஸ்

இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனம்18189ஆம் ஆண்டு துவக்கப்பட்டு அதிகளவிலான துணிகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்து வந்தது.

தற்போது இந்நிறுவனம் ஆண்களுக்கான ஆடை தயாரிப்பில் உள்ளது, மேலும் பன்னாட்டு நிறுவன தயாரிப்புகள் இந்தியசந்தையில் இந்நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aditya Birla Group consolidates apparel business into one entity

In a major restructuring exercise, Aditya Birla Group on Sunday announced merger of all its branded apparel businesses into one entity, Aditya Birla Fashion and Retail Ltd, through an all-share deal.
Story first published: Monday, May 4, 2015, 14:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X