தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சர்வதேச சந்தையில் ஐரோப்பிய பொருளாதாரம் தொடர்ந்துமேம்பட்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்துவரும் நிலையில், அமெரிக்க நாணயக் கொள்கையும் நிலையாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே திங்கட்கிழமை நாணய சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.

தங்கம் விலை

தங்கம் விலை

நாணய சந்தை வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 20 ரூபாய் அதிகரித்து 2,781 ரூபாயில் இருந்து 2,801 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 19 ரூபாய் அதிகரிகத்து 2,600 ரூபாயிலிருந்து 2,619 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் இன்று உயர்வைச் சந்தித்துள்ளது. இதன் படி 1 கிலோ பார் வெள்ளியின் விலை 350 ரூபாய் உயர்ந்து 40,630 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.68 ரூபாய் வலிமை அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

மேலும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 0.32சதவீதம் குறைந்து 59.69 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price hits fresh 3 months high

The gold price continued to build on gains made in the previous week on Monday, with increased fears over a Greek exit from the eurozone and the prospect of a delay to the normalisation of US monetary policy providing support.
Story first published: Monday, May 18, 2015, 17:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X