ஜூன் மாதம் துவங்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிஸ்கோ இணைந்தது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: உலகின் மிகப்பெரிய நெட்வொர்கிங் நிறுவனமான சிஸ்கோ, மத்திய அரசின் 20 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கும் திட்டத்தில் இணைந்திட சில முக்கிய மாநில அரசுகளுடன் போச்சுவார்த்தை நடத்தியது.

 

இதன்படி சிஸ்கோ நிறுவனம் மும்பை, புனே, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ ஆகிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு அமைக்கும் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் துவக்கம்..

ஜூன் முதல் துவக்கம்..

மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஜூன் மாதம் முதல் ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீடு மற்றும் urban rejuvenation திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சிஸ்கோ என்ன செய்யப் போகிறது...

சிஸ்கோ என்ன செய்யப் போகிறது...

இந்த நான்கு மாநிலங்களிலும் சிஸ்கோ நிறுவனம் ஸ்மார்ட் தெரு விளக்குகள், போக்குவரத்து மேம்பாடு, சிசிடிவி பாதுகாப்பு மற்றும் தண்ணீர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

அமித் பதின்ஸ்
 

அமித் பதின்ஸ்

இதுகுறித்துச் சிஸ்கோ நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் அமித் பதின்ஸ் கூறுகையில், இந்த நான்கு திட்டத்தில் மும்பை நகரில் கண்காணிப்புத் தளத்தை மேம்படுத்த காவல்துறைக்கு ஐபி சிட்டி கண்காணிப்பு முறையைச் செயல்படுத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் காவல் துறை இந்தப் புதிய ஸ்மாட் சிட்டியில் ஒவ்வொரு அசைவும் தெளிவாகக் கண்காணிக்க முடியும்.

 

50 பில்லியன் டாலர் வர்த்தகம்

50 பில்லியன் டாலர் வர்த்தகம்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் 20 ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்தின் மூலம் நாட்டில் புதிதாக 45 - 50 பில்லியன் டாலர் வர்த்தகம் உருவாக உள்ளதாக அவுட்லுக் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

சிஸ்கோ நிறுவனம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் இணைந்தது மட்டும் அல்லாமல், டிஜிட்டல் இந்தியா திட்டத்திலும் இணைய உள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சிஸ்கோ மட்டும் அல்லாமல், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் எனப் பல நிறுவனங்கள் போட்டிப்போட தயார் நிலையில் உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cisco to provide networking infra for four smart city projects

Networking company Cisco, which has been in discussions with State Governments across the country to transform 20 cities into smart and connected cities, has closed four project proposals in Navi Mumbai, Pune, Jaipur and Lucknow.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X