டெபிட் கார்டு பயன்படுத்தினால் வரிச் சலுகை.. மத்திய அரசின் புதிய முயற்சி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவிக்க, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், ரூபாய் நோட்டு பரிவர்த்தனையைக் குறைக்கவும் மத்திய அரசு விரைவில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

வரிச் சலுகை

வரிச் சலுகை

இதன்படி மின்னணு பரிமாற்றத்தை செய்பவரும் (கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோர்), பெறுபவரும் (உதாரணமாகக் கடைக்காரர்) வருமான வரியில் சில சலுகைகளை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

50 சதவீத பரிவர்த்தனை

50 சதவீத பரிவர்த்தனை

மத்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வியாபாரி தனது 50 சதவீத நிதி பரிமாற்றத்தை மின்னணு முறையில் பெற்றால், தனது வாட் வரி (மதிப்புக் கூட்டு வரி) விதிப்பில் 1 -2 சதவீத வரிச் சலுகையை அளிக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

மேலும் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு பிரிமாற்றச் செலவுகளும், அரசு சேவை பெறுவதில் சில விலை சலுகைகளும் வழங்கப்படும்.

தற்போது பிஎஸ்என்எல் சேவைக்கான பணத்தை நீங்கள் மின்னணு பிரிமாற்றம் செய்தால் 1 சதவீத சலுகை கிடைக்கும்.

 

கள்ள நோட்டுப் புழக்கம்

கள்ள நோட்டுப் புழக்கம்

ரூபாய் நோட்டுப் பயன்பாட்டைக் குறைக்கவும், கள்ள நோட்டுப் புழக்கத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிற சலுகை

பிற சலுகை

பெட்ரோல் பங்க், கியாஸ் ஏஜென்சி, ரயில் டிக்கெட் மற்றும் அரசு சேவைகளுக்காகப் பணம் செலுத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை யன்படுத்துபவர்களுக்குப் பரிவர்த்தனை கட்டணம் கிடையாது.

கட்டாயம்

கட்டாயம்

ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் அனைத்தும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்வது கட்டாயம் ஆக்கப்படும்.

வரி, அபராதம்

வரி, அபராதம்

அரசுத்துறைகள் தங்களது வரி, அபராதம் மற்றும் கட்டண வசூலுக்குக் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதை ஏற்கும் வசதியை உருவாக்க வேண்டும்.

மீண்டும் மூர்த்தி!

மீண்டும் மூர்த்தி!

இன்போசிஸ் நிர்வாகத்தில் மீண்டும் நாராயணமூர்த்தி?இன்போசிஸ் நிர்வாகத்தில் மீண்டும் நாராயணமூர்த்தி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax benefits for e-payments will go a long way in curbing illegal cash

This, going by the draft, will be done through incentivising both the consumer, who makes the payments and merchant, who accept it, by tax benefits if a certain portion of their total transactions do not involve exchange of cash.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X