சர்வதேச சந்தையில் மந்தநிலை.. 400 புள்ளிகள் மீண்டாலும் சரிவு பாதையிலேயே சென்செக்ஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடியால் ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகள் அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் வாரத்தின் முதல் வர்த்தக நாளின், காலை வர்த்தகத்திலேயே சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் வரை சரிந்து தரையைத் தட்டியது.

நிதிநெருக்கடியின் காரணமாகக் கிரீஸ் நாட்டில் அடுத்த ஒரு வார காலத்திற்கு வங்கிகள் மற்றும் பங்குச்சதைகள் மூடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே இந்திய சந்தையில் மிக அதிகரப்படியான சரிவை எட்டியுள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 166.69 புள்ளிகள் சரிந்து 27,645.15 புள்ளிகளை முடிவடைந்தது. நிஃப்டி குறியீடும் 62.70 புள்ளிகள் சரிந்து 8,318.40 புள்ளிகளை அடைந்தது சரிவு பாதையிலேயே உள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 445 புள்ளிகள் சரிவுடன் துவங்கி 600 புள்ளிகள் வரை குறைந்தது. இதனால் சந்தை முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு அதிகளவில் குறைத்துள்ளனர்.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

11.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 569.27 புள்ளிகள் வரை சரிந்து 27,241.08 புள்ளிகளை எட்டியுள்ளது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 166.69 புள்ளிகள் சரிந்து 27,645.15 புள்ளிகளை முடிவடைந்தது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று அதிகளவிலான சரிவைத் தழுவியது. 11.30 மணியளவில் நிஃப்டி குறியீடு 166.50 புள்ளிகள் சரிந்து 8,214.60 புள்ளிகளை எட்டியுள்ளது.

வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 62.70 புள்ளிகள் சரிந்து 8,318.40 புள்ளிகளை அடைந்தது சரிவு பாதையில் உள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.28 பைசா சரிந்து 63.93 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

டாலருக்கு எதிரான யூரோ மதிப்பும் இன்று சரிந்துள்ளது.

 

அனைத்தும் சரிவே

அனைத்தும் சரிவே

திங்கட்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களுமே சரிவை தழுவியுள்ளதால், வர்த்தகம் மந்தமடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Plunges Over 600 Points as Greece Crisis Rocks Global Markets

Indian stock markets fell sharply on Monday and bond yields rose as Greece looked set to default on its debt repayment this week, sparking concerns about foreign selling in emerging markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X