2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட 4 முக்கிய வரி மாற்றங்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2015-16-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், தனிநபர்களுக்கான வரி சலுகைகளைத் தேடிப்பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மாறாக, பெருமளவு வருமானத்தைச் சேவை வரி உயர்வின் விளைவிற்குப் பலனாகச் செலுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

வரிகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்று 2015-16-ம் ஆண்டின் பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி குறிப்பிட்டிருந்தார். இதோ அவற்றில் உங்களைப் பாதிக்கும் சில விஷயங்களைப் படியுங்கள்:

2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட 4 முக்கிய வரி மாற்றங்கள்!

சுழற்சி வைப்பு நிதிக்கான TDS

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒழுங்குடன் சேமிக்க உங்களுக்கு உதவும் சேமிப்பு முறை தான் சுழற்சி வைப்பு நிதியாகும்.

முன்னதாக, நிலையான வைப்பு நிதிகளின் வட்டி அளவு ரூ.10000-ஐ தாண்டினால் மட்டுமே TDS விதிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது சுழற்சி வைப்பு நிதிகளுக்கும் இந்த விதி பொருந்துகிறது.

அதிலும் நீங்கள் 15G/H படிவங்களைச் சமர்ப்பிக்காவிடில், உடனடியாக TDS பிடித்தம் செய்யப்படும்.

வட்டி வருமானம்

முன்னதாக, ஒரு வங்கி கிளையில் நீங்கள் வைத்திருக்கும் கணக்கின் வட்டி ரூ.10,000-ஐ தாண்டினால் மட்டுமே TDS விதிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது பல்வேறு கிளைகளிலும் உள்ள கணக்குகளுக்குக் கிடைக்கும் வட்டி விகிதங்கள் ஒன்றாகக் கூட்டப்பட்டு இது கணக்கிடப்படுகிறது.

2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட 4 முக்கிய வரி மாற்றங்கள்!

எனினும், ரூ.2,50,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்கள் வரி செலுத்த தேவையில்லை. இந்த நபர்கள் 15G அல்லது 15H படிவங்களைச் சமர்ப்பித்து இருந்தால், அவர்களுக்கு TDS-ம் பிடிக்கப்படாது.

தொழிலாளர் சேமநல நிதிக்கு TDS

5 ஆண்டுகள் முடிவதற்கு முன்னதாக, தொழிலாளர் சேமநல நிதியிலிருந்து எடுக்கப்படும் எந்தவொரு தொகைக்கும் 10 சதவீதம் TDS விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தொகை ரூ.30,000-க்கும் குறைவாக இருந்தால் TDS விதிக்கப்படுவதில்லை.

மேலும், 5 ஆண்டுகள் பணி நிறைவடைவதற்கு முன்னதாகவே தொழிலாளர் சேமநல நிதியை எடுப்பதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட 4 முக்கிய வரி மாற்றங்கள்!

இவ்வாறு பணத்தை எடுக்கும் போது, நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். நிரந்தரக் கணக்கு எண் குறிப்பிடப்படாத இடங்களில், அதிகபட்சம் 30 சதவீதம் வரையிலும் TDS விதிக்கப்படும்.

சேவை வரி 14%

ஜுன் 1, 2015 முதல் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்த நாளிலிருந்து அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதைத் தவிர்க்க முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 Major Tax Changes In 2015 In India

In Union Budget 2015-16, there were hardly any tax benefits for individuals. On the other hand, a lot of your income will be wiped away with a hike in the Service Tax.
Story first published: Saturday, July 4, 2015, 16:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X