ஸ்னாப்டீல்.காம்: போட்டி போட்டு முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ஈகாமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்னாப்டீல் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்யச் சீனா, ஜப்பான் நிறுவனங்கள் கடுமையாகப் போட்டி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய சந்தையில் பிளிப்கார்ட், அமேசான் ஒரு பக்கம் தாறுமாறாகப் போட்டிப் போட்டாலும், அமைதியாகத் தனது இயல்பான போக்கில் ஸ்னாப்டீல் தனது வர்த்தகத்தை உயர்த்தி வருகிறது. இதன் காரணமாகவே இந்நிறுவனத்தில் முதலீடு குவிந்த வண்ணம் உள்ளது.

சீனா, ஜப்பான் மற்றும் தைவான்

சீனா, ஜப்பான் மற்றும் தைவான்

தைவான் நாட்டின் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், சீன ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா ஆகிய நிறுவனங்கள் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் தலா 200 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

மேலும் ஜப்பான் நாட்டின் சாப்ட்பாங்க், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் தனது முதலீட்டை அதிகரிக்க மேலும் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

 

ஜாஸ்பர் இன்போடெக்

ஜாஸ்பர் இன்போடெக்

இதனால் ஸ்னாப்டீல் நிறுவனத்தை நிர்வகிக்கும் ஜாஸ்பர் இன்போடெக் நிறுவனத்திற்குப் புதிதாக 500 மில்லியன் டாலர் முதலீடு கிடைத்துள்ளது.

பங்குகள்
 

பங்குகள்

கடந்த வருடம் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளுக்காக ஜப்பான் சாப்ட்பாங்க் 627 கோடி ரூபாய் முதலீடு செய்தது, தற்போது செய்துள்ள 100 மில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டிற்கு இந்நிறுவனம் 2 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.

அலிபாபா மற்றும் பாக்ஸ்கான்

அலிபாபா மற்றும் பாக்ஸ்கான்

இந்நிலையில் அலிபாபா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களின் 200 மில்லியன் டாலர் முதலீட்டிற்கு இரு நிறுவனங்களும் தலா 4 சதவீத பங்குகளைப் பெறுகிறது.

மதிப்பீடு

மதிப்பீடு

இந்த முதலீட்டின் போது ஸ்னாப்டீல் நிறுவனம் 5-6 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் 15 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

கடந்த சில நாட்டுகளுக்கு முன்னர்ப் பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு முதலீட்டாளர்கள் மூலம் சுமார் 700 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியது.

அமேசான்

அமேசான்

மேலும் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் 5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஈகாமர்ஸ் சந்தை

ஈகாமர்ஸ் சந்தை

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு நிறுவனங்கள் வரை அனைத்தும் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய திட்டங்கள் மற்றும் முதலீட்டைச் செய்து வருவதால், அடுத்த 2 வருடத்தில் இத்துறையின் வர்த்தக அளவு 3 மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal raises $500m from Foxconn, Alibaba, Softbank

Taiwan's Foxconn and Chinese e-commerce giant Alibaba are investing about $200 million each in Snapdeal, while Softbank — the largest shareholder in Snapdeal — is infusing additional $100 million, sources said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X