பந்தன் வங்கி.. 501 கிளைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்தியாவில் வங்கிச் சேவை அளிப்பதற்காக ரிலையன்ஸ், பிர்லா போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில், பந்தன் என்னும் சிறு நிதிச்சேவை அமைப்புச் சிறப்பான திட்டம் மற்றும் நடைமுறைகளை வகுத்து வங்கி சேவை அளிப்பதற்காக உரிமத்தை ரிசர்வ் வங்கியிடும் இருந்து தட்டிச் சென்றது.

 

இதன் பின் பல்வேறு கட்டங்களாகத் தனது விரிவாக்கப் பணிகளைச் செய்து தற்போது முழுமையாக இயங்கத் துவங்கியுள்ளது.

பந்தன் வங்கி

பந்தன் வங்கி

கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய வங்கித்துறையில் 501 வங்கிக் கிளைகளுடனும், 1.43 கோடி கணக்காளர்களுடன் பந்தன் வங்கி தனது பயணத்தைத் துவங்கியது.

24 மாநிலங்கள்

24 மாநிலங்கள்

இதுகுறித்துப் பந்தன் வங்கி கூறுகையில், இந்தியாவில் 501 வங்கிக் கிளைகள், 19,500 ஊழியர்கள், 2022 சேவை மையங்கள், 50 ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் 10,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் அளிப்பு, 1.43 கோடிக் கணக்குகள் என 24 மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட உள்ளது.

இலக்கு..

இலக்கு..

2016ஆம் ஆண்டு முடிவில் பந்தன் வங்கி 632 கிளைகள், 250 ஏடிஎம் என 27 மாநிலங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.

அருண் ஜேட்லி
 

அருண் ஜேட்லி

இப்புதிய வங்கியை அருண் ஜேட்லி கொல்கத்தாவில் ஞாற்றுக்கிழமை துவங்கி வைத்தார். மேலும் இவ்வங்கியின் 71% கிளைகள் ஊரகப் பகுதிகளில் மட்டுமே உள்ளது, அதிலும் 35 சதவீதம் வங்கிச் சேவை பெறாத ஊரகப் பகுதிகளில் உள்ளதாகப் பந்தன் வங்கி பெருமையுடன் கூறியது.

சந்திர சேகர் கோஷ்

சந்திர சேகர் கோஷ்

பந்தன் வங்கி துவக்க விழாவில் கலந்துகொண்ட இவ்வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், "எங்களது நிதிச்சேவையின் வெற்றிக்கு "கஸ்டமர் ஃபஸ்ட்" என்பதே மந்திரம். எங்களின் வாடிக்கையாளர் மத்தியில் பெரியவர் சிறியவர் என்று வேறுபாடு காட்டுவதில்லை. அனைவரும் ஒரேமாதிரியாக நடத்தப்படுகிறது. " என்று கூறினார்.

தென் இந்தியாவில்...

தென் இந்தியாவில்...

இவ்வங்கி தென் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் மட்டுமே செயல்பட்டாலும், கூடிய விரைவில் விரிவாக்கம் அடையும் எனப் பந்தன் வங்கி தெரிவித்துள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bandhan joins Indian banking league with 501 branches

Bandhan Bank on Sunday began operations as a full-fledged bank with 501 branches and 1.43 crore accounts across the country, becoming the newest member of the estimated USD two-trillion Indian banking industry.
Story first published: Tuesday, August 25, 2015, 11:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X