பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க சென்னையில் 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் புதிய தொழில் துவங்குவதற்கான ஒப்புதல், செயல்முறை, குறித்த நேரத்தில் நடவடிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவை தமிழ்நாட்டை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் விரும்பக்கூடிய சந்தையாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிய முதலீடு மற்றும் தொழிற்துறை மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பிடிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாடுட்டை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

செப்டம்பர் 9 மற்றும் 10

செப்டம்பர் 9 மற்றும் 10

உலக நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணமாகச் சென்னையில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் செப்டம்பர் 9,10ஆம் தேதிகளில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

புதிய முதலீடு

புதிய முதலீடு

இம்மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் உள்ள வாய்ப்புகள் மற்றும் வசதிகளைப் பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்து புதிய முதலீடு மற்றும் தொழிற்துறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இத்தகைய மாநாட்டைத் தமிழக அரசு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொழிற்துறை வளர்ச்சி

தொழிற்துறை வளர்ச்சி

தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மந்தமான தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாகத் தமிழக அரசு இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது.

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

இந்நிகழ்ச்சியில் குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ரா ஆகிய மாநில முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களைக் கவர பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

முதலீடு

முதலீடு

தமிழக அரசு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 900 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இவை அனைத்தும் 10 கோடியில் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலானவை.

இதன் மூலம் மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தீரட்டியுள்ளது. மேலும் 3,050 ஏக்கர் பரப்பளவில் 384 நிறுவனங்களுக்குத் தொழிற்துறை அமைப்புகளை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.

 

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் செய்யப்பட்ட 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் அரசு சுமார் 60,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

முக்கியத் தலைவர்கள்

முக்கியத் தலைவர்கள்

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டிற்கு மாநிலத்தில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Time for Tamil Nadu to showcase its strengths: industry

A place where it is easy to do business, and clearances and processes are timely and transparent — this is the biggest assurance that Tamil Nadu can give investors, say industrialists and industry bodies.
Story first published: Friday, September 4, 2015, 14:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X