அதளப் பாதாளத்துக்குப் போகும் 'எச்சிஎல் நிறுவன' பங்குகள்.. என்ன காரணம்?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே எச்சிஎல் நிறுவனப் பங்குகள் சுமார் 15 சதவீதம் வரை சரிந்து சந்தை முதலீட்டாளர்களை அதிரவைத்தது.

இதற்கு முக்கியக் காரணம் புதன்கிழமை இந்நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தான் உள்ளது. வாங்க அதை என்னவென்று பார்ப்போம்.

அறிக்கை...

அறிக்கை...

எச்சிஎல் நிறுவனத்தின் செப்டம்பர் மாதம் அமெரிக்க டாலர் மற்றும் பிற நாணய பரிமாற்றங்களின் மூலம் அதிகளவிலான வருவாயை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் தனது முக்கிய வாடிக்கையாளர்களுடனான பிரச்சனை மற்றும் நிதிவரவுகள் மூலம் எச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

 

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

இந்நிறுவனத்தின் டாலர் வருவாயை செப்டம்பர் மாத காலத்தில் மட்டும் சுமார் 80 புள்ளிகள் குறைந்துள்ளது.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர் உடனான பிரச்சனையின் மூலம் இந்நிறுவனத்தின் 20 மில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்ட முடியாமல் போனது. மேலும் நடப்புக் காலாண்டில் குறைவான வருவாய் பெற்ற மாதமாகச் செப்டம்ர் உள்ளது.

மேலும் இந்த வாடிக்கையாளரை இலக்கும் நிலையில் எச்சிஎல் உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இன்பராஸ்டக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (IMS)
 

இன்பராஸ்டக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (IMS)

இந்நிறுவனத்தின் இன்பராஸ்டக்சர் மேனேஜ்மென்ட் மேம்பாட்டிலும் சில முக்கியப் பிரச்சனைகளின் மூலம் இப்பிரிவில் வளர்ச்சி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. ஜூன் மாத காலாண்டில் IMS பிரிவின் வருவாய் சுமார் 5.2 சதவீதம் வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கும்.. கணிப்புகளும்..

இலக்கும்.. கணிப்புகளும்..

சந்தையைப் பொறுத்த வரையில், இந்நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வருவாய் 3 - 3.5 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையின் படி இந்நிறுவனத்தின் வருவாய் 1 - 1.5 சதவீதம் மட்டுமே உயர்வடையும் எனத் தெரிகிறது.

விளைவு..

விளைவு..

இதனால் அடுத்தச் சில நாட்களுக்கு இந்நிறுவனப் பங்குகளில் மிகவும் குறைவான முதலீடு பெறப்படும். முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீதான முதலீட்டைக் குறைந்த காலக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் நீண்ட கால நோக்கத்துடன் பார்ப்பது சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL Tech drops on revenue warning

HCL Technologies press release stating that revenues in the September quarter will be tepid due to adverse cross-currency rates, a client specific issue and skewed revenue growth in the infrastructure management space (IMS).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X