'ஆடி' ஆடிய நிலையில் 'பென்ஸ்' முந்தியது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், இந்திய சந்தையில் 2015ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் சுமார் 10,000 கார்களை விற்பனை செய்துள்ளது.

இதனால் இந்திய சந்தையின் ஆடம்பர கார் விற்பனையில் முதல் இடத்தில் இருந்த ஆடி நிறுவனத்தை 2ஆம் இடத்திற்குத் தள்ளி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

ரொனால்டு எஸ் ஃப்லோஜெர்

ரொனால்டு எஸ் ஃப்லோஜெர்

கடந்த வருடத்தின் மொத்த விற்பனையும் 2015ஆம் ஆண்டில் முதல் 9 மாதங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் எட்டிவிட்டது.

இந்நிலையில் கடந்த 9 மாதங்களில் சுமார் 10,000 கார்களை விற்பனை செய்து புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சீஇஓ ரொனால்டு எஸ் ஃப்லோஜெர் தெரிவித்தார்.

 

விற்பனை

விற்பனை

நடப்பு நிதியாண்டில் பென்ஸ் நிறுவனம் பல புதிய மாடல் கார்களை வெளியிட்டுள்ளதால், மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. இதனால் விற்பனை தொடர்ந்து உயர்வு பெற்றுள்ளதாக ரொனால்டு எஸ் ஃப்லோஜெர் தெரிவித்தார்.

40 சதவீத உயர்வு..

40 சதவீத உயர்வு..

ஜனவரி - செப்டம்பர் காலகட்டத்தில் பென்ஸ் நிறுவனம் 10,079 கார்களை விற்பனை செய்ததாகவும், 2014ஆம் ஆண்டு முழுவதும் 10,201 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும் அவர் புள்ளிவிவரங்களை அறிவித்தார்.

மேலும் கடந்த வருடத்தை ஒப்பிடும்போது நிறுவனத்தின் விற்பனை சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

 

ஆடி நிறுவனம்

ஆடி நிறுவனம்

இந்திய சந்தையில் இந்நிறுவனத்திற்குச் சரியான போட்டி அளிக்கும் ஆடி நிறுவனம் வருடத்தின் பாதியிலேயே விற்பனை மந்தமடைந்து பென்ஸ் முந்தியது.

வித்தியாசம்..

வித்தியாசம்..

இந்நிலையில் ஆடி இந்திய நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் கூறுகையில், விற்பனையில் பென்ஸ் முன்னிலை வகித்தாலும், மிகவும் குறைவான வித்தியாசத்திலேயே உள்ளது. வருடத்தின் இறுதியில் விற்பனையில் கண்டிப்பாக ஆடி நிறுவனம் முன்னிலை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mercedes looks to topple Audi from No. 1 in 2015

Mercedes Benz India has reported sales of more than 10,000 units in the first three quarters of this year — close to the number it sold in the whole of last year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X