வேலைநிறுத்த போராட்டம்: வங்கி ஊழியர்கள் பார்முலாவை ஃபாலோ செய்யும் வருமான வரித்துறையினர்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வருமான வரித்துறை அதிகாரிகள் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் 50,000 மேற்பட்ட வருமான வரித் துறை ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

வேலைநிறுத்த போராட்டம்: வங்கி ஊழியர்கள் பார்முலாவை ஃபாலோ செய்யும் வருமான வரித்துறையினர்!

வருமான வரித் துறை பணியாளர்களுக்கு, குறித்த காலத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என மத்திய கூட்டு அமைப்புகளின் மூலம் அளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் மீது நிதி அமைச்சகமும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனை எதிர்த்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என வருமான வரித் துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.கே.கனோஜியா தெரிவித்தார்.

இதனால் வியாழக்கிழமை (இன்று), வருமான வரித் துறை அலுவலகங்களில் அன்றாடப் பணிகள் முற்றிலும் முடங்கியது.

மேலும் அவர், இனியும் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், வரும் நாள்களில் வரி வசூல் செய்யும் பணிகளும், வரி செலுத்துவோருக்கான பணிகளும் வேலைநிறுத்த போராட்டத்தால் கடுமையான பாதிக்கப்படும் என ஏ.கே.கனோஜியா தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் ITEF மற்றும் ITGOA ஆகிய இரு முக்கிய அமைப்புகள் இணைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I-T employees to hold day-long strike today

Over 50,000 employees of the Income Tax Department are on a day-long countrywide strike on Thursday to press for their service-related demands.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X