பெண் இயக்குநர்களை நியமிக்காத 370 நிறுவனங்களுக்கு அபராதம்: மும்பை பங்குச்சந்தை அறிவிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி சில மாதங்களுக்கு முன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர்களையாவது நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 2 முறை கால நீட்டிப்பும் செய்யததும் குறிப்பிடத்தக்கது.

பெண் இயக்குநர்களை நியமிக்காத 370 நிறுவனங்களுக்கு அபராதம்: மும்பை பங்குச்சந்தை அறிவிப்பு..

ஆனால் இந்தியாவில் இன்னும் சில நிறுவனங்களின் பெண் இயக்குநர்களை நியமிவில்லை. இதனைக் கண்டிக்கும் வகையில் 370 நிறுவனங்களுக்கு மும்பை பங்குச் சந்தை அபராதம் விதித்துள்ளது. ஜூன் 30-ம் தேதி வரையில் பெண் இயக்குநர்களை நியமனம் செய்யாத 530 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பெண் இயக்கு நர்களை நியமனம் செய்யாத நிறுவனங்கள் 50,000 ரூபாய் அபராதமும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை பெண் இயக்குநர்களை நியமிக்காத நிறுவனங்களுக்கு 50,000 ரூபாயுடன் ஒரு நாளைக்கு 1000 ரூபாய்(பெண் இயக்குநர்களை நியமிக்கும் வரை) அபராதம் விதிக்கப்படும்.

பெண் இயக்குநர்களை நியமிக்காத 370 நிறுவனங்களுக்கு அபராதம்: மும்பை பங்குச்சந்தை அறிவிப்பு..

அக்டோபர் 1 முதல் 1.42 லட்ச ரூபாய் அபராதம் மற்றும் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பெண் இயக்குநர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்றால் இந்த அபராதம் தவிர இதர ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவும் செபி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE fines 370 firms for non-compliance with Sebi norms on woman director

Leading stock exchange BSE today said it has imposed a fine on 370 companies for not complying with Sebi norms to appoint at least one woman director on their respective boards within the prescribed timelines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X