கடனைத் தீர்க்க மொபைல் டவர் வர்த்தகம் விற்பனை.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதிரடி முடிவு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 38,000 கோடி ரூபாய் கடனை தீர்க்க இந்நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் 96 சதவீத ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனப் பங்குகளையும் மீதமுள்ள 4 சதவீத பங்குகளையும் விற்கத் திட்டமிட்டுள்ளது.

 

இந்த விற்பனையின் மூலம் 22,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்டவும், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு இந்நிறுவன கடனை பெருமளவில் குறைக்கவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் இன்பராடெல்

ரிலையன்ஸ் இன்பராடெல்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொபைல் டவர் வர்த்தகத்தைக் கடந்த 2006ஆம் ஆண்டு மும்பை நீதிமன்ற அனுமதியுடன் ரிலையன்ஸ் இன்பராடெல் என்னும் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.

இந்நிறுவனத்தின் 96 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் சுமார் 43,500 மொபைல் டவர்கள் இயங்கி வருகிறது.

 

விற்பனை

விற்பனை

ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் 43,500 டவர்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 22,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என டெலிகாம் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

10 நாட்கள்
 

10 நாட்கள்

இன்பராடெல் நிறுவனத்தின் 100 சதவீத வர்த்தகம் மற்றும் பங்குகளை வாங்குவதற்கு நாட்டின் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டனர். தற்போது சரியான நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.

கடன்

கடன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெயரில் உள்ள 38,000 ரூபாய் கடனை குறைப்பதன் மூலம் debt-to-ebitda ratioவை அடுத்த 18-24 மாதத்திற்குள் 3 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ள ஆர்காம்.

தற்போது இதன் அளவு 4.64 சதவீதமாக உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RCOM may sell mobile tower business for Rs 22k crore

Reliance Communications (RCOM) is close to finalizing a deal to sell its entire stake in tower unit Reliance Infratel, sources aware of the development said.
Story first published: Wednesday, November 25, 2015, 17:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X