அசலைக் கொடுக்கிறேன், ஆனா வட்டி கொடுக்க முடியாது.. விஜய் மல்லையாவின் திடீர் முடிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய 6,900 கோடி ரூபாய் கடனில், அசல் தொகையை மட்டும் தான் செலுத்துவதாக வங்கிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காக விஜய் மல்லையா மற்றும் வங்கி தரப்புகள் மத்தியில் அடுத்தச் சில நாட்களில் முக்கியப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

கடன் தொகை

கடன் தொகை

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய அசல் தொகை 4,500-5,000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கடனுக்கான வட்டி தொகை தோராயமாக 2,000 கோடி ரூபாய் எனவும் வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது விஜய் மல்லையா, தான் அளிக்க வேண்டிய மொத்தக் கடனில், வட்டி தொகை இல்லாமல், அசல் தொகையை மட்டும் செலுத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

வங்கி தரப்பு..

வங்கி தரப்பு..

பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான குழு, வட்டித் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முடியாது எனவும் குறைந்த அளவிலான வட்டி தொகையை மட்டுமாவது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா செலுத்த வேண்டும் என வங்கி தரப்புகள் தெரிவித்துள்ளது.

மேலும் தங்களுக்கு அசல் தொகையை மட்டும் பெறுவதற்கு உடன்பாடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

இந்த விவகாரம் குறித்துத் தகவல்களைப் பொதுத்துறை வங்கிகள் மத்திய நிதியமைகத்திற்கு உடனக்குடன் தெரிவிக்கும் நிலையில் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்

கிங்பிஷர் மதுபானத்தைத் தயாரிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் மீது வாங்கிய கடன் வங்கிகளுக்கு உடனடியாகச் செலுத்தும் பணியிலேயே தற்போது முழுமையாக ஈட்டுப்பட்டுள்ளதாக அவர் பேசினார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

இந்திய விமானத் துறையில் கொடிகட்டிப் பறந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளாலும், நிதி நெருக்கடியின் காரணமாக முழுமையாக முடிங்கிப்போனது.

மோசடியாளர் என்ற பட்டம்..

மோசடியாளர் என்ற பட்டம்..

வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விஜய் மல்லையாவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா மோசடியாளர் என்று அறிவித்துள்ளது.

வையிட் அண்ட் வாட்ச்

வையிட் அண்ட் வாட்ச்

சரி திடீரென்று மாறிய விஜய் மல்லையாவின் நேர்மையைப் பொறுத்திருந்து பார்ப்போம் வாங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya ready to pay principal amount Kingfisher owes to banks

Vijay Mallya, the chairman of grounded carrier Kingfisher Airlines, has offered banks to pay the principal amount that he owes but not the interest component and he has approached the bankers seeking a meeting, which may take place during the next few days.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X