போலி இ.மெயிலைக் கண்டு ஏமாறவேண்டாம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு, கடன் அட்டை தொடர்புடைய ரகசிய எண்களையோ, கடவுச் சொற்களையோ வருமான வரித் துறை கோரவில்லை. அதுபோன்ற ரகசிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வருமான வரித்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலங்களாக வருமான வரித்துறையினரின் பெயரில் போலியான மின்னஞ்சல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி, அவர்களின் ரகசிய தகவல்களை கேட்டுப்பெற்றது சில போலி மின்னஞ்சல்கள். இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு பல புகார்கள் சென்றன.

போலி இ.மெயிலைக் கண்டு ஏமாறவேண்டாம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

இதையடுத்து இதுதொடர்பாக வருமான வரித் துறை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அதில் , மின்னணு நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரி செலுத்துவோருடனான வழக்கமான தொடர்புகள் அனைத்தையும், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக வருமான வரித் துறை மேற்கொண்டு வருகிறது. வருமான வரித் துறையின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி, போலியான மின்னஞ்சல்களை அனுப்பும் மோசடியாளர்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு, கடன் அட்டை தொடர்புடைய ரகசிய எண்களையோ, கடவுச் சொற்களையோ வருமான வரித் துறை எப்போதும் கோரவில்லை. அதுபோன்ற ரகசிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம். மேலும், அந்த மின்னஞ்சல்களுடன் வரும் இணைப்புகளையும் திறந்துபார்க்கவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income tax dept is in no mood for giveaways, that email on hefty refund is fake

Don’t respond to any email received by you in the last few days from the Income Tax (I-T) department asking you to share details of your bank account, credit card, PIN, etc. so that the department can transfer your tax refund due to you.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X