பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்காக ஸ்காலர்ஷிப்பை அறிவித்த விப்ரோ

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: பிற்படுத்தப்பட்ட மாணவிகள் பிளஸ் டூவிற்கு பிறகு கல்வியைத் தொடர விப்ரோ நிறுவனம் சந்தூர் ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

விப்ரோ கன்ஸ்யூமர் கேர் விப்ரோ கேர்ஸுடன் சேர்ந்து பிற்படுத்தப்பட்ட மாணவிகள் பிளஸ் டூவிற்கு பிறகு கல்வியைத் தொடர சந்தூர் ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்காக ஸ்காலர்ஷிப்பை அறிவித்த விப்ரோ

இந்த ஸ்காலர்ஷிப் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தூர் ஸ்காலர்ஷிப் 2016-2017ம் ஆண்டு அமலுக்கு வரும். முதல்கட்டமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த ஸ்காலர்ஷிப் அளிக்கப்படும்.

சந்தூர் ஸ்காலர்ஷிப் திட்டம் இன்று ஹைதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் தெலுங்கானா துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான காதியாம் ஸ்ரீஹரி, ஆந்திர மாநில சமூக மற்றும் பழங்குடியினத்தவர்கள் நலத்துறை அமைச்சர் கிஷோர் பாபு முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு டிப்ளமோ அல்லது டிகிரி படிக்க விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு சந்தூர் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. ஸ்காலர்ஷிப் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை அரசு ஜூனியர் கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பெறலாம்.

சந்தூர் ஸ்காலர்ஷிப்பின்படி பெரிய நகரில் உள்ள கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.24 ஆயிரமும் வழங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: wipro students விப்ரோ
English summary

Wipro Consumer Care announces scholarship for girl students

In an endeavour to encourage underprivileged girls who wish to pursue higher education after Grade 12, Wipro Consumer Care in association with 'Wipro Cares' has announced Santoor Scholarship programme, an initiative which would provide free scholarships. It would be a recurring annual programme, Wipro said in a statement.
Story first published: Wednesday, February 10, 2016, 17:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X