3,000 ஊழியர்களை ஏமாற்றி நாட்டை விட்டு ஓடினார் விஜய் மல்லையா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: முன்னாள் தலைவர் என்ற பட்டத்திற்குப் பெயர்போன விஜய் மல்லையா, 3,000 ஊழியர்களை ஏமாற்றி நடுரோட்டியில் நிற்க வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடியுள்ளார்.

<strong><em>(பெட்ரோல், மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் " title="(பெட்ரோல், மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் "முகேஷ் அம்பானி"..!)" />(பெட்ரோல், மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் "முகேஷ் அம்பானி"..!)

வங்கிகள் ஒரு புறம் சொத்துக்களைச் சரியாகக் கணக்கிடாமல் பணத்தை வாரி வழங்கிய விட்டுக் கொடுத்த கடனை வசூல் செய்ய விஜய் மல்லையாவின் ஒரு புறம் நாடுநாடாகத் தேடி வருகின்றன.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

இந்நிலையில் முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் 3,000 ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சுமார் 300 கோடி ரூபாய் நிலுவை சம்பளத்தை அளிக்காமல் ஊழியர்கள், வங்கிகள், அரசு என அனைத்து தரப்பினரையும் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் மிஸ்டர்.மல்லையா.

முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ்

முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ்

பயணிகள் விமானச் சேவையில் கொடிகட்டி பறந்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் கடன் பிரச்சனை, வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம், தொடர் வர்த்தகச் சரிவு, ஊழியர்கள் சம்பள நிலுவை, ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் எனப் பல பிரச்சனைகளில் சிக்கத் தவித்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு முழுமையாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் முடங்கிப்போனது.

3,000 ஊழியர்கள்

3,000 ஊழியர்கள்

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் முழுமையாக முடங்கிப்போன நிலையில் 2,000 ஊழியர்கள் கடந்த 2015ஆம் வெளியேறினர், மேலும் பேப்பர் அடிப்படையில் இன்னமும் 900 ஊழியர்கள் இந்நிறுவன பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கும் சுமார் 2012ஆம் ஆண்டில் இருந்து சம்பளம் அளிக்கப்படவில்லை.

 

வேலை இன்னும் கிடைக்கல..

வேலை இன்னும் கிடைக்கல..

இன்னும் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கிரவுடன் ஆபிசர், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர் என முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய பலரும் இன்னமும் வேறு நிறுவனங்களில் வேலைக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

வரி திரும்புதல்..

வரி திரும்புதல்..

அதிர்ஷ்டவசமாகவும் அல்லது அதீத திறமை கொண்டதனால் இன்னவோ இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சிலருக்கு வேறு நிறுவனங்களில் வேலைக் கிடைத்துள்ளது. ஆனால் இவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார் மல்லையா.

கிங்பிஷர் நிறுவனம் வருமான வரி அறிக்கையைப் பல வருமாகச் சமர்ப்பிக்காத நிலையில், வருமான வரித்துறை இந்நிறுவனத்தைக் கணக்கை முடக்கியுள்ளது. இதனால் ஊழியர்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டி வருமான வரி ரிட்டனும் கிடைக்கவில்லை.

 

பாவம் ஊழியர்கள்

பாவம் ஊழியர்கள்

வங்கி ஒரு புறம் நீதிமன்றங்கள் மூலம் போராடும் நிலையில், ஊழியர்கள் நடுரோட்டில் நின்று கொண்டு தங்களுக்கான சம்பளத்தைக் கொடுக்குமாறு கேட்கின்றனர்.

இவர்கள் வெறும் 3000 ஊழியர்கள் இல்லை, 3000 குடும்பங்கள் கிட்டத்தட்ட 12,000 பேர் கொண்ட ஒரு சிறிய சமுகம்.

 

வங்கிகள்

வங்கிகள்

இந்தியாவில் வங்கிகள் மாணவர்களுக்குக் கடன் அளிக்கவும், விவசாயிகளுக்குக் கடன் அளிக்க ஒரு முறைக்கு 1,000 முறை யோசித்து அள்ளிக் கொடுக்க வேண்டிய இடத்தில் கிள்ளிக் கொடுக்கிறது. இப்படிக் கிள்ளிக்கொடுப்பதிலும் வங்கியாளர்கள் அவர்களை ஏளனமாகப் பார்ப்பது, மரியாதை குறைவாகப் பேசுவது என 1008 அதட்டல்கள்.

அதுபோக மத்திய அரசு மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் வட்டித் தொகையில் பல சலுகையை அளித்தாலும், அதை மறைத்து வங்கிகளின் நிதி நிலை காப்பாற்ற வட்டியையும் அசலையும் அடித்துப் பிடுங்காத குறையாகப் பிடுங்குகிறது வங்கிகள்.

 

பம்பி ஓடும் வங்கிகள்

பம்பி ஓடும் வங்கிகள்

ஆனால் விஜய் மல்லையாவிடம் தனது சொத்து மதிப்பில் 5இல் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் வைத்துக்கொண்டுள்ளதை கணக்கிடாமல் கடனை வாரி வழங்கியுள்ளது. இப்போது சொத்துக்களைப் பல தடைகளுக்குப் பின் முடக்கி விற்பனை செய்தாலும், வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய 7,000 கோடி ரூபாய் கடனை முழுமையாகத் தீர்க்க முடியாது.

மாணவர்களிடமும், விவசாயிகளிடம் காட்டும் அதட்டல்களை இவரிடம் காட்ட வங்கிகளிடம் திராணி இல்லை. இதனால் தான் ஜாலியாக வோல்டு டூர் போயுள்ளார் விஜய் மல்லையா.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kingfisher Airlines owes 3,000 employees Rs 300 crore in salary: vijay mallya

While banks grapple with Vijay Mallya in court and outside to get their money back, over 3000 employees of his defunct carrier Kingfisher Airlines still haven't got their salaries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X