அமேசான், கூகிள், ஆப்பிள் நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது காக்னிசன்ட்.. ஹைதராபாத்தில் புதிய அலுவலகம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: இந்திய மென்பொருள் சந்தையில் வருமானத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட்,. அமேசான், கூகிள், ஆப்பிள் நிறுவனங்களைப் போல ஹைதராபாத்தில் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டரை நிறுவ உள்ளது.

 

ஏற்கனவே ஹைதராபாத் நகரத்தில், உலகின் மிகவும் லாபகரமாகத் திகழும் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் பல வருடங்களாகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அமேசான், கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய முதலீட்டில் புதிய தொழில்நுட்ப வளாகத்தை அமைக்கும் பணியில் ஈட்டுப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத் தற்போது காக்னிசன்ட் நிறுவனமும் இப்பகுதியில் டெவலப்மென்ட் சென்டர் அமைப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது.

ரூ.500 கோடி முதலீடு

ரூ.500 கோடி முதலீடு

கச்சிபவ்லி என்னும் இடத்தில் காக்னிசன்ட் நிறுவனம் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் முதலீட்டுடன் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டர் அமைக்கத் தெலங்கான அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

8,000 ஊழியர்கள்

8,000 ஊழியர்கள்

புதிதாக அமைக்கப்பட இந்தி சென்டரில் காக்னிசன்ட் நிறுவனத்தின் சுமார் 8,000 ஊழியர்கள் ஓரே நேரத்தில் பணியாற்றும் அளவிற்கு அமைக்கப்பட உள்ளது.

முக்கிய டெலிவரி சென்டர்
 

முக்கிய டெலிவரி சென்டர்

ஏற்கனவே இப்பகுதியில் 2.25 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட வளாகத்தில் செயல்பட்டும் வரும் காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த விரிவாக்க முயற்சியின் மூலம் ஹைதராபாத் அலுவலகம் நாட்டின் முக்கியமான டெலிவரி சென்டராக மாற்றப்படும் வேண்டும் என்ற நோக்குடே 500 கோடி முதலீடு செய்து விரிவாக்கப் பணிகள் செய்து வருகிறது.

புதிய அலுவலகம் அமைப்பதற்கான அனைத்து விதமான ஒப்புதல்களையும் தெலங்கான அமைப்புக் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு அளித்துள்ளது.

 

18 நிறுவனங்களுக்கு அனுமதி

18 நிறுவனங்களுக்கு அனுமதி

சமீபத்தில் தெலங்கான மாநில அரசின் SEZ அமைப்பு நடத்திய கூட்டத்தில் சுமார் 18 ஐடி மற்றும் ஐடிஈஸ் நிறுவனங்களுக்குப் புதிய அலுவலகத்தை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

Sify நிறுவனம்

Sify நிறுவனம்

இதில் SIFY நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியின் மூலம் இந்நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 வேலைவாய்ப்பு உருவாக்கும் வண்ணம் புதிய அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மேலும் ஹைதராபாத் நகரத்தில் கச்சிபவ்லி என்னும் இடத்தில் ஏற்கனவே நாட்டின் முன்னணி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் எனப் பல நிறுவனங்கள் அடங்கியுள்ள இப்பகுதியை மேலும் முக்கியமானதாக்க அமேசான், கூகிள், ஆப்பிள் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களும் இப்பகுதியில் வந்து அமைய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant heads to Hyderabad, to set up ₹500-crore facility

After Amazon, Google and Apple, it is the turn of Cognizant Technology Solutions (CTS) to announce plans for building a large development centre in Hyderabad.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X