திருபாய் அம்பானி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை.. பத்ம விருதுகள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய வர்த்தகத் துறையில் குறைந்த காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு பத்ம விபூஷண் விருதை அளித்தது.

இந்த விருதை திருபாய் அம்பானியின் துணைவியார் கோகிலாபென் அம்பானி அவர்கள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் அறையில் பெற்றார்.

இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல வருடங்களுக்குப் பின் திருபாய் அம்பானியின் மொத்த குடும்பமும் ஒன்றிணைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2016ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதைக் கலை-சினிமா துறைக்காக நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றார்.

இக்கட்டுரையில் 2016ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெற்ற வர்த்தக துறை ஜம்பவான்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை இப்போது பார்ப்போம்.

அம்பானி குடும்பம்

அம்பானி குடும்பம்

திருபாய் அம்பானியின் மறைவிற்குப் பின் அவர்களின் வாரிசுகளான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் பிரித்துக்கொண்டு எலியும் பூனையுமாக வர்த்தக உலகில் இருந்தனர்.

கோகிலாபென் அம்பானி

கோகிலாபென் அம்பானி

இந்தச் சொத்துப் பிரிவில் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருமகன்களின் நிறுவனங்களிலும் கோகிலாபென் அம்பானி கணிசமான பங்கு இருப்பை வைத்துள்ளார்.

வருடாந்திர கூட்டம்

வருடாந்திர கூட்டம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (முகேஷ் அம்பானி), ரிலையன்ஸ் குழுமம் (அனில் அம்பானி) ஆகிய நிறுவனங்களின் நிர்வாக மட்டத்தில் எவ்விதமான அதிகாரம் இல்லாவிட்டாலும் பங்கு இருப்பு அளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்குகளை வைத்துள்ளார் கோகிலாபென் அம்பானி.

இதனால் இந்நிறுவனங்களின் ஒவ்வொரு வருடாந்திர கூட்டத்திலும் கோகிலாபென் அம்பானி கலந்துக்கொள்வது வழக்கம்.

 

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

கடந்த 50 வருடத்தில் திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் போல் எந்த ஒரு நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை இதுவரை அடையவில்லை. இவரின் திறனை போற்றும் வகையிலேயே மத்திய அரசு திருபாய் அம்பானிக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கியுள்ளது.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் வர்த்தக உலகைச் சேர்ந்த பல நிறுவனத்தின் தலைவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதை வழங்கியுள்ளது. இதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலருக்கு விருதுகள் கிடைத்துள்ளது.

 

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஏற்கனவே 2000ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்ற ரஜினிகாந்த், 2016ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதைக் கலை-சினிமா துறையில் நம் சூப்பர் ஸ்டார் பெற்றார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பெற்ற விருதின் விபரங்களை 12வது ஸ்லைடரில் பார்க்கவும். இனி வர்த்தக உலகில் விருதுகளைப் பெற்றவர்களைப் பார்ப்போம்.

 

இந்து ஜெயின்

இந்து ஜெயின்

பெனென்ட் கோல்மேன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவரான இந்து ஜெயின் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அளித்தது. இவரின் சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலோன்ஜி மிஸ்திரி

பலோன்ஜி மிஸ்திரி

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் பலோன்ஜி மிஸ்திரி அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அளித்ததுள்ளது.

டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் இவர் உள்ளார். மேலும் இவரது மகன் சைரஸ் மிஸ்திரி அவர்கள் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

 

திலீப் சங்வி

திலீப் சங்வி

நாட்டின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான சான் பார்மா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் திலீப் சங்வி அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

இவர் இந்தியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜய்பால் சிங் பங்கா

அஜய்பால் சிங் பங்கா

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைவரான அஜய்பால் சிங் பங்கா அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர் அமெரிக்க அரசின் பல முக்கியப் பதவிகளிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவ்ரப் ஸ்ரீவாஸ்தவா

சவ்ரப் ஸ்ரீவாஸ்தவா

இந்திய ஏஞ்சல் நெட்வொர்க் அமைப்பின் துணை நிறுவனர் மற்றும் நாஸ்காம் ஆமைப்பின் முன்னாள் தலைவரான சவ்ரப் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் வர்த்தகத் துறைக்கான பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

வர்த்தகத் துறை

வர்த்தகத் துறை

மேலும் கார்டா கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் Keki Hormusji Gharda மற்றும் மருத்துவரான மகேஷ் ஷர்மா ஆகியோர் 2016ஆம் வர்த்தகத் துறைக்கான பதம விருதுகளைப் பெற்றனர்.

டாக்டர் விஸ்வநாதன் சாந்தா

டாக்டர் விஸ்வநாதன் சாந்தா

சென்னையில் அடையாரில் அமைந்துள்ள உலகின் மிகச் சிறந்த கேன்சர் மருத்துவமனையாக விளங்கும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் விஸ்வநாதன் சாந்தா அவர்களுக்கு மருத்துவத் துறைக்கான பத்ப விபூஷண் விருதை மத்திய அரசு அளித்தது.

கடந்த 1955ஆம் ஆண்டு முதல் இவர் அடையார் புற்றுநோய் மையத்தில் தனது மருத்துவச் சேவையைச் செய்து வருகிறார்.

அதேபோல் கேஸ்ரோஎன்டர்நாலஜி மருத்துவரான டாக்டர் சந்திரசேகர் சேஷாதிரி அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

 

மயில்சுவாமி அண்ணாதுறை

மயில்சுவாமி அண்ணாதுறை

இந்திய விண்வெளி ஆய்ராய்ச்சி அமையமான இஸ்ரோவில் பணியாற்றும் மயில்சுவாமி அண்ணாதுறை அவர்களுக்குப் பத்மஸ்ரீ விருதை அளித்து மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்தது.

இவர் உலக நாடுகளை வாய்பிளந்து பார்க்கவைத்த சந்தராயன் 1 , சந்தராயன் 2 மற்றும் மங்கள்யான் திட்டங்களின் தலைவராவார்.

அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை வாயை பிளக்கவைத்த அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை வாயை பிளக்கவைத்த "பட்ஜெட் மங்கள்யான்"

சமுகச் சேவை

சமுகச் சேவை

மேலும் சமுகச் சேவைக்கான பத்மஸ்ரீ விருதை ஸ்ரீநிவாசன் கந்தலை, அருணாசலம் முருகானந்தம் ஆகியோர் பெற்றனர்.

 கோடீஸ்வர வாரிசு...!

கோடீஸ்வர வாரிசு...!

'டாடி' வழியில் ஜோராக கிளம்பும் கோடீஸ்வர வாரிசு...! 'டாடி' வழியில் ஜோராக கிளம்பும் கோடீஸ்வர வாரிசு...!

வெற்றி நிச்சயம்..!

வெற்றி நிச்சயம்..!

வாழ்வில் வெற்றி பெற, இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போது..!வாழ்வில் வெற்றி பெற, இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The bitter split of Reliance empire among Mukesh and Anil Ambani seemed to have been pushed as the brothers on Monday to displayed with their mother Kokilaben to receive the prestigious Padma Vibhushan awarded to their father late Dhirubhai Ambani.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X