English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

பெண்கள் தான் பாஸ்.. இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் தமிழ்நாடு..!

Posted by:
Updated: Thursday, April 14, 2016, 13:58 [IST]
 

டெல்லி: இன்றளவில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நிலையில் இந்தியாவில் இருக்கும் 5.84 கோடி நிறுவனங்களில் 80.50 லட்சம் நிறுவனங்களில் பெண்கள் தொழில் முனைவோர்களாக உள்ளனர் என 6வது பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில் பெண் தலைவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதனால் வட மாநிலங்களின் வர்த்தகத் துறை மத்தியில் பெண்களுக்கு முன் உரிமை அளிப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

வெறும் 13.76 சதவீதம் மட்டும்

இந்தியாவில் இயங்கி வரும் சுமார் 5.84 கோடி நிறுவனங்கள் மத்தியில் வெறும் 13.76 சதவீதம் அதாவது 80.50 லட்சம் நிறுவனங்களில் மட்டுமே பெண்கள் தலைவர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் உள்ளனர்.

தமிழ்நாடு

6வது பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையில் பெண் தொழில் முனைவோர்கள் குறித்த ஆய்வில் தமிழ்நாடு சுமார் 10.87 லட்சம் நிறுவனங்களுக்குப் பெண்கள் தலைவராகவும், தொழில் முனைவோர்களாகவும் உள்ளனர்.

இந்திய மாநில வாரியன இப்பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரள மாநிலம் (9.13 லட்சம்) 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

ஐடி நகரம்

நாட்டிலேயே ஐடித்துறையின் மூலம் அதிகளவிலான வருவாய் பெறும் கர்நாடக மாநிலத்தில் வெறும் 5.45 லட்சம் நிறுவனங்களில் மட்டுமே பெண்கள் தொழில் முனைவோர்களாகவும் உள்ளனர். இதனால் கர்நாடக மாநிலம் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தலைநகரம் டெல்லி

நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியில் வெறும் 70,434 நிறுவனங்களில் மட்டும் பெண்கள் தொழில் முனைவோர்கள் உள்ளனர். இந்தியாவின் மொத்த நிறுவனங்கள் எண்ணிக்கையில் இது வெறும் 0.87 சதவீதம் தான்.

விவசாயத் துறை

இந்நிலையில் நாட்டின் முதுகெழும்பாக இருக்கும் விவசாயத் துறை சார்ந்த நிறுவனங்களில் 34.3 சதவீதம் அதாவது 27.61 லட்சம் நிறுவனங்களுக்கும் பெண்கள் தலைவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் விவசாயத் துறையின் மொத்த சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர். நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 14 சதவீதம் விவசாயத் துறையைச் சார்ந்தது.

 

உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறை

அதுமட்டும் அல்லாமல் உற்பத்தித் துறையில் 23.99 லட்சம் (29.8%) மற்றும் வர்த்தகத் துறையில் 14.80 லட்சம் (18.23%) நிறுவனங்கள் பெண்கள் தான் பாஸ்.

6வது பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கை

நாட்டின் பெண்களுக்குச் சம உரிமை மற்றும் பெண்களுக்கான பொருளாதார மற்றும் நிதியியல் தேவையைப் பூர்த்திச் செய்வதன் மூலம், பாலின பாகுபாடு இல்லாத சமுதாயம் மற்றும் பெண்களுக்கான அதிகாரத்தை நிலைப்படுத்த முடியும்.

இதனால் நாட்டின் வளர்ச்சியும், பொருளாதார மேம்பாடும் எளிமையாகவும் நிலையான வகையில் எட்டிவிட முடியும் என 6வது பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது.

 

முதல் முறை

பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின் பெண்கள் தொழில் முனைவோர்கள் பற்றிய ஆய்வை முதல் முறையாக 2016ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டுள்ளது.

சுய நிதி உதவி

இந்த ஆய்வில் கிடைத்த மற்றொரு அதிர்ச்சி என்வென்றால் பெண்கள் தலைமையில் இருக்கும் 80.50 லட்சம் நிறுவனங்களில் 79.07 சதவீத நிறுவனங்கள் சுயமான நிதி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Thursday, April 14, 2016, 13:50 [IST]
English summary
Women empowerment may be a catch phrase for policy-makers, but when it comes to running businesses, members of the fairer sex are not getting their due.
கருத்தை எழுதுங்கள்

Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?