செலவைக் குறைக்கப் புதிய யுக்தி.. அதிர்ந்துபோன 'ஐடி நிறுவன ஊழியர்கள்'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக விளங்கும் 160 பில்லியன் டாலர் மதிப்புடைய தகவல் தொழில்நுட்ப துறை, வரலாற்றில் காணாத மிகவும் மோசமான வர்த்தக நிலையை நடப்பு நிதியாண்டில் சந்தித்துள்ளது.

கடந்த வாரம் சிட்டி குரூப், டார்கெட் கார்ப், ஆர்பிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களின் செயல்பாட்டு முறை மற்றும் ஊழியர்களுக்கு மையப்படுத்தி வருமானம் பெரும் செயல்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் வெளியேறிய நிலையில், தற்போது ஆட்டோமொபைல், உற்பத்தி சார்ந்த நிறுவனங்களும் தற்போது வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி ஸ்லைடரை மட்டும் பார்க்க வேண்டாம்.

ஐந்திய ஐடி நிறுவனங்கள்

ஐந்திய ஐடி நிறுவனங்கள்

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை அளிக்கும் போது, ஊழியர்களை அவுட்சோர்சிங் என்ற பெயரில் பிராஜெட் முடியும் வரை தாரைவாக்கும். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தைச் சந்தித்தது.

சிட்டி குரூப் முதல் ஆர்பிஎஸ்

சிட்டி குரூப் முதல் ஆர்பிஎஸ்

இந்நிலையில் அவுட்சோர்சிங் முறையைச் சகித்திக்கொள்ளமால் சிட்டி குரூப், டார்கெட் கார்ப், ஆர்பிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களின் சேவையைப் பெற விரும்பாமல் வெளியேறியுள்ளது.

பணம் மட்டும் அல்ல..

பணம் மட்டும் அல்ல..

இந்நிலையில் சிட்டி குரூப், டார்கெட் கார்ப், ஆர்பிஎஸ், லோவிஸ் மற்றும் கார்கில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் கூறுகையில், இந்திய ஐடி நிறுவனங்கள் பன்னாட்டுத் திட்டங்களைக் கையில் வைத்துக்கொள்ளக் கட்டணங்களில் சலுகை அளிப்பதை விட்டுவிட்டு மேற்கத்திய நாடுகளுக்கு இணையான செயல்முறை கொண்டு வர வேண்டும்.

மேலும் முக்கியத் தொழில்நுட்பத்தில் வல்லுநர்கள் மற்றும் புதிய ஐடியாக்களை உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

வெளியேற்றம்

வெளியேற்றம்

அவுட்சோர்சிங் முறையில் இருந்து நாங்கள் சில வருடங்களுக்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டும், இது மிகவும் தாமதமானது. மேலும் ஊழியர்களின் அதிகப்படியான சம்பளத்திற்காக மட்டும் நாங்கள் வெளியேறுகின்றோம் என்றால் நிச்சயமாக இல்லை.

அவுட்சோர்சிங் முறையில் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்பதே உண்மை எனக் கார்கில் நிறுவன தலைவர்கள் கூறியுள்ளார்.

 

20 வருடங்கள்

20 வருடங்கள்

கடந்த 20 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்ப சேவைக்காக இந்தியாவை நாடியிருந்தது முக்கியக் காரணம் குறைவான செலவுகள் மட்டுமே.

ஜாக்பாட்

ஜாக்பாட்

இதனைக் கருத்தில் கொண்டு இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான பணத்தைச் சம்பாதிக்கத் துவங்கியது. அதுமட்டும் அல்லாமல் இன்றைய இதே தொழில்நுட்ப சேவையைச் சிறப்பான முறையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்க வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற பல சந்தைகள் உருவாகியுள்ளது.

பார்வையில் மாற்றம்...

பார்வையில் மாற்றம்...

கடந்த சில வருடங்களாக இந்திய நிறுவனங்களும் சரி, பன்னாட்டு நிறுவனங்களும் சரி நீண்ட கால வளர்ச்சி மற்றும் சேவையை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளனர்.

இதனால் பல நிறுவனங்கள் அவுட்சேர்சிங் முறையில் வெறுக்கத் துவங்கியுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் இந்திய ஐடி நிறுவனங்கள் கேட்கும் மிகப்பெரிய விலை.

 

விலையா..?

விலையா..?

ஒரு இந்திய நிறுவனம் பன்னாட்டு நிறுவனத்திற்கு அவுட்சேர்சிங் சேவை அளித்தால், 5 வருடம் அனுபவம் உள்ள ஊழியர்களுக்குத் தொழில்நுட்ப ஏற்ப ஒரு நாளுக்கு 450 டாலரில் இருந்து 700 டாலர் வரை பணத்தைச் சம்பாதிக்கிறது.

ஆனால் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் இத்தொகையில் மிகவும் பாதி மட்டுமே என்பது வேறு கதை.

 

நீட்டிப்பு..

நீட்டிப்பு..

அதுமட்டும் அல்லாமல் ஒரு பிராஜெக்ட்டை குறித்த நேரத்தில் முடிக்காவிட்டால் கூடுதலாகக் கால நீட்டிப்புச் செய்து அதற்கும் பணத்தை வசூல் செய்கிறது ஐடி நிறுவனங்கள். இந்தத் தலைவலியே வேண்டாம் என்று தான் பன்னாட்டு நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் தவிர்கிறது.

பழைய முறை..

பழைய முறை..

பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை அவுட்சோர்சிங் செய்யும் போது பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பார்த்து ஆர்டரை கொடுக்கும். ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் கருத்தை மையமாக வைத்து ஆர்டர்கள் கொடுக்கப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை இனி கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

 

மென்பொருள் வடிவமைப்பு

மென்பொருள் வடிவமைப்பு

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் maintenance சேவைகளைப் பெற அதிகளவிலான முதலீட்டைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இழப்பு

வாடிக்கையாளர்கள் இழப்பு

இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் பல முன்னணி வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ஐடி நிறுவனத்தில் இணையும் FRESHER-களின் சம்பளம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ்..

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ்..

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களாக இருக்கும் இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் டார்கெட், லோவீஸ், ஜேபி மோர்கன் போன்ற பல நிறுவனங்களை இழந்துள்ளது.

இவை அனைத்தும் தற்போது தனது நிறுவனத்திலேயே தகவல் தொழில்நுட்ப பிரிவை அமைத்துள்ளது.

 

இந்திய ஐடி சந்தை

இந்திய ஐடி சந்தை

இதே நிலை தொடர்ந்தால் அடுத்தச் சில ஆண்டுகளில் இந்திய ஐடி சந்தையின் நிலை மிகவும் மோசமான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய இன்ஜினியரிங் பட..." data-gal-src="http:///img/600x100/2016/04/27-1461757400-2jobcompany5.jpg">
இது தான் உண்மை..

இது தான் உண்மை..

<strong><em>இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!</em></strong>இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!

<strong><em>'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?</em></strong>'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?

<strong><em>சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும், மனநிறைவும் கிடைக்கும் துறை இது..!</em></strong>சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும், மனநிறைவும் கிடைக்கும் துறை இது..!

<strong><em>ஐடி.. புதிதாய் சேர்ந்தவர்களின் சம்பளம் கடந்த 6 வருடமாக உயரவில்லை!!</em></strong>ஐடி.. புதிதாய் சேர்ந்தவர்களின் சம்பளம் கடந்த 6 வருடமாக உயரவில்லை!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global giants like Citigroup, RBS are shifting business away from Indian IT companies.

India's $160-billion information technology sector grapples with one of the slowest years of growth in the history of the industry, some of their largest customers shifting business away from Indian IT companies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X