இன்று அட்சய திரிதியை.. தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகிலேயே தங்கத்தை அதிகளவில் புழக்கத்தில் வைத்துள்ள நாடுகளில் சீனா முதல் இடம், இந்தியா 2வது இடம். நம் நாட்டு மக்களிடத்தில் உள்ள தங்கம் அனைத்தும் அரசின் கையில் இருந்தால், இந்தியாதான் வல்லரசு நாடு. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தங்கம் மற்றும் தங்க நகைகள் புழக்கத்தில் உள்ளது.

 

இந்தியர்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கத்தை வாங்கும் அட்சய திரிதியை தினத்தன்று தங்கத்தை வாங்கலாமா..? வேண்டாமா என்பதே நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

தங்கம் மீதான முதலீடு..

தங்கம் மீதான முதலீடு..

எப்போது தங்கம் விலை உயர்கிறதோ, அப்போது முதலீட்டுக்கான சிறந்த ஆதாரம் என்ற பட்டியலில் இருந்து தங்கம் நீக்கப்படுகிறது. எப்படி..?

உதாரணம்

உதாரணம்

சிரியாவில் பிரச்சனை உச்ச நிலையை எட்டிய ஆகஸ்ட் 2013ஆம் வருடம், தங்கத்தின் விலை 34,000 ரூபாய் (24 கேரட் 10 கிராம்) என்ற உச்ச நிலையை அடைந்தது. தற்போது இதன் விலை 30,450 ரூபாயாகக் குறைந்துள்ளது.

வங்கி வைப்பு நிதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வருடத்திற்கு 10 சதவீத உயர்வு என்று வைத்துக்கொண்டால் கூட 3 வருடத்தில் தற்போது தங்கத்தின் விலை 45,000 ரூபாய் என்ற அளவில் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக 12 சதவீதம் அளவில் சரிந்து 30,450 ரூபாயாகச் சரிவடைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கும் இவ்வேளையில், அட்சய திரிதியை அன்று தங்கத்தை வாங்க வேண்டாம் என்பதற்கான முக்கியக் காரணங்களை, தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வாசகர்களுக்காகத் தொகுத்துள்ளது.

சர்வதேச சூழல்
 

சர்வதேச சூழல்

பங்குச்சந்தையும் சரி, தங்கம் மற்றும் வெள்ளியும் சரி, சர்வதேச சந்தைகள் பொறுத்தே உயர்வும் சரிவும் ஏற்படும். ஆனால் தற்போது சர்வதேச நாடுகள் பொருளாதார ஸ்திர தன்மைக்காகப் போராடி வரும் நிலையில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியோ, அல்லது திவாலாகும் நிலையோ இல்லை.

எனவே அடுத்த ஒரு வருடத்திற்குத் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அமெரிக்காவில் லெமேன் பிரதரஸ் நிதிநெருக்கடியில் சிக்கி திவாலான காலகட்டத்தில் தங்கம் விலை மிகப்பெரிய அளவிலான உயர்வை அடைந்தது.

 

தங்கமும்... டாலரும்...

தங்கமும்... டாலரும்...

தங்கமும் டாலரும் எப்போதும் எதிரும் புதிருமாகவே செயல்படும். தங்கம் விலை உயர்ந்தால் டாலர் மதிப்பு சரியும். அதேபோல் உலகப் பொருளாதாரம் நிலைபெற்றால் கூட டாலர் மதிப்பு சரியும்.

தற்போது டாலர் மதிப்பு 66.60 பைசாவாக வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தங்கம் விலை சரிவதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. இது சர்வதேச பொருளாதாரத்தின் ஸ்திர தன்மையின் காரணமே.

 

அமெரிக்கப் பெடரல் வங்கி

அமெரிக்கப் பெடரல் வங்கி

ஜூன் மாதம் அமெரிக்கப் பெடரல் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்காக ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால், தங்கம், பங்குச்சந்தையில் இருக்கும் பெரும் பகுதி முதலீடுகள் நிலையான வருமான கிடைக்கும் கடன் பத்திர முதலீட்டுக்கு மாறும். இதனால் தங்கம் விலை அதிகளவில் குறையும்.

 

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இந்தியாவிற்குத் தேவையான பெரும் பகுதி தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே ரூபாய் மதிப்பின் படியே தங்கத்தின் விலையும் இருக்கும்.

நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இறக்குமதி செய்யப்படும் தங்கமும் விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தங்கம் உயர வாய்ப்புகள் இருந்தாலும் 10 சதவீதம் லாபம் அளவிற்கு இருக்காது.

 

மத்திய அரசின் நெருக்கடி

மத்திய அரசின் நெருக்கடி

நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை நிலைப்படுத்த மத்திய அரசு தங்க இறக்குமதியை அதிகளவில் குறைந்து வருகிறது.

ஆனால் முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தங்க முதலீட்டு, தங்க நாணயமாக்கும் திட்டம் எனப் பல திட்டங்களை மத்திய அரசு உருவாகினாலும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை. இத்தகை சூழ்நிலையில் தங்கம் மீது முதலீடு செய்தால் அதிகளவிலான லாபத்தை எதிர்பார்க்க முடியாது.

 

பாதுகாப்பும்.. லாக்கர் செலவுகளும்..

பாதுகாப்பும்.. லாக்கர் செலவுகளும்..

தற்போது தங்கத்தை வாங்கினால் அதனைப் பாதுகாக்க நாம் வீட்டில் வைக்க முடியாது, காரணம் பாதுகாப்பு குறைபாடு எனப் பல. இதையும் தாண்டி வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களில் வைத்தால் அதற்கான கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது.

தங்கம் முதலீட்டில் நாம் பெறும் லாபத்தை லாக்கர் கட்டணத்தை விடவும் அதிகமாக உள்ளது.

 

குறைந்த கால முதலீடு

குறைந்த கால முதலீடு

சரி என்னதான் செய்ய வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், குறுகிய கால முதலீட்டு நோக்கில் நீங்கள் முதலீடு செய்யலாம். இதில் லாபம் நஷ்டம் என இரண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

திருமணம் மற்றும் சுபகாரியங்கள்

திருமணம் மற்றும் சுபகாரியங்கள்

இந்தியாவில் திருமணம் மற்றும் சுபகாரியங்களில் தங்கத்திற்குத் தனி இடம் உண்டு. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் தங்கத்தை முதலீடாகப் பார்க்காமல் வாங்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Whenever gold prices soar, it has been a bad bet as an investment. Let's cite some classic examples.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X