மோடியின் 2 வருட ஆட்சியில் அம்பானி, அதானி சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்று 2 வருடங்கள் முழுமையாக முடிந்ததுள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியா பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதாகச் சந்தையில் கருத்து நிலவினாலும், உண்மையில் உயர்வாகப் பேசப்படும் அளவிற்கு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி உயரவில்லை தொடர்ந்து குறைந்துகொண்டே தான் வருகிறது.

 

இத்தகைய மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் இந்திய சந்தையில் ரிலையன்ஸ், அதானி குழுமம் உட்பட டாப் 15 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த 2 வருட காலத்தில் சுமார் 17 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது. இதுவே மோடியின் 2 வருட ஆட்சியின் பிரதிபலிப்பா..?

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்திய நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி கடந்த மே 29, 2014ஆம் ஆண்டுப் பதவியேற்றினார். சரியாக 2 வருடம் 2 நாள் முடியும் நேரத்தில் நாட்டின் டாப் 15 கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 31 லட்சம் கோடியாகக் குறைந்து வர்த்தகக் குழுமங்களைச் சோகத்தில் தள்ளி முதலீட்டாளர்களை நஷ்டத்திற்குத் தள்ளியுள்ளது.

96 லட்சம் கோடி

96 லட்சம் கோடி

மும்பை பங்குச்சந்தை அளித்த தகவல் படி, பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள மொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு 96 லட்சம் கோடி ரூபாய் இதில் 3இல் 1 பங்கு மதிப்பு டாப் 15 நிறுவனங்கள் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சரிவு..
 

சரிவு..

மோடி பிரதமராகப் பதவியேற்றிய தினத்தில் டாப் 15 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 37.44 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, முதல் வருட முடிவில் இதன் மதிப்பு 36.5 லட்சம் கோடியாகக் குறைந்தது.

அதன் பின் 2 வருட முடிவில், தற்போது இதன் மதிப்பு 31 லட்சம் கோடி வரையில் குறைந்து நிறுவனங்களைப் பதம்பார்த்துள்ளது.

படம்: ஈடிமார்கெட்ஸ்.காம்

 

அம்பானி சாம்ராஜ்யம் வீழ்ச்சி

அம்பானி சாம்ராஜ்யம் வீழ்ச்சி

மோடியின் 2 வருட ஆட்சிக் காலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (14.97% சரிவு), ஜிந்தால் குழுமம்(30.89% சரிவு), அதானி குழுமம்(51.32% சரிவு), வேதாந்தா(42.85% சரிவு), அனில் அம்பானியின் அனில் துருபாய் அம்பானி குழுமம் (43.82% சரிவு) ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

டாடா பிர்லா

டாடா பிர்லா

இதேக்காலக்கட்டத்தில் டாடா (9.48% உயர்வு), பார்தி ஏர்டெல் (15.98%உயர்வு), எச்சிஎல் (6.46% உயர்வு), பிராமல் (109.73% உயர்வு), பிர்லா சிகே (80.92% உயர்வு), ஷாபூர்ஜி பலோன்ஜி (163.10% உயர்வு) குழுமம் உயர்வைச் சந்தித்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

டாப் 15 நிறுவனங்கள் பட்டியலில் முகேஷ் அம்பாயின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17.795 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 13.193 லட்கம் கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் 25 சதவீதம் அளவில் சரிவை சந்தித்துள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

மோடியின் நெருக்கிய நன்பர் எனப் பேசப்படும் கெளதம் அதானியின் அதானி குழுமத்தின் மொத்த மதிப்பு 51 சதவீதம் சரிந்து 1.17 லட்சம் கோடியில் இருந்து 57,150 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

மோடியின் 2 வருட ஆட்சிக் காலத்தில் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் மதிப்பு 43.82 சதவீதம் சரிந்து 87.363 கோடி ரூபாயில் இருந்து 49,081 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

டாடா

டாடா

பெரிய அளவிலான வளர்ச்சி ஏதுமில்லை என்றாலும் டாடா குழுமத்தின் மொத்த மதிப்பு 9.48 சதவீதம் அதிகரித்து 7.15 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 7.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கூகிள் - ஆப்பிள்

கூகிள் - ஆப்பிள்

கூகிள் - ஆப்பிள் மத்தியிலான போட்டி மீண்டும் சூடுபிடித்தது..!கூகிள் - ஆப்பிள் மத்தியிலான போட்டி மீண்டும் சூடுபிடித்தது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani, Ambanis biggest losers in Modi's 2 years

With just two days to go before Prime Minister Narendra Modi completes his second year in office, 'Acche Din' still looks distant for equity investors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X