லாபத்தை அள்ளித் தரும் 11 தொழில் துறைகள்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகில் எந்தத் தொழில் அதிக லாபத்தைத் தரக்கூடியது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால் இதோ உங்களுக்கான விடையை நாங்கள் தருகிறோம். இதைப் படித்துவிட்டு உங்கள் வேலையைக் கூட அதற்கேற்றார்போல் மாற்றிக்கொள்ளலாம்.

தொழிலில் பலவிதமான பிரிவுகள் உள்ளன ஆனால், கோட்பாடுகள் படி மூன்று பெரும் பிரிவுகள் மட்டும் பொதுவாக அதிகம் காணப்படும். இந்தக் கோட்பாடு படி தொழிற்துறையைத் தொடக்க நிலைத் தொழில்கள், உயர் நிலைத் தொழில்கள் மற்றும் மூன்றாம் நிலைத்தொழில்கள் என மூன்று கிளைகளாகப் பிரிக்கிறது.

தொடக்க நிலைத் தொழில்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களை நேரடியாக உபயோகிக்கும் வேளாண்மை, சுரங்கத் தொழில்கள், மீன்பிடித்தல் போன்றவற்றைக் குறிக்கும். உற்பத்தித் தொழில் உயர்நிலைத் தொழில்களையும், சேவைகள் துறை மூன்றாம் நிலைத் தொழில்களையும் குறிக்கின்றன.

தொழிற்துறை ஒரு நாட்டின் மற்றும் சமுதாயத்தின் முதுகெலும்பாகும். நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்து ஒவ்வொரு தொழிலிலும் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையும் லாபமாகும். இந்நிலையில் அதிக லாபம் தரும் துறைகளைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பட்டியலிட்டுள்ளது.

புறநோயாளிகள் சேவை மையங்கள்

புறநோயாளிகள் சேவை மையங்கள்

நிகர இலாபம் : 11.7%
இந்த மையங்கள் பொதுவாகத் தனியாரால் நிருவகிக்கப்படுவதால் இங்கு நிகர லாபம் அதிகமாக உள்ளது. சில நாடுகளில் அரசு அல்லது பொது மருத்துவமனைகளை விடச் சிறந்த கருவிகள் உள்ளதால் இவை பிரபலமடைந்து வருகின்றன.

நிறுவன மற்றும் அமைப்பு நிர்வாகம்

நிறுவன மற்றும் அமைப்பு நிர்வாகம்

நிகர இலாபம் 12.6 சதவிகிதம்
மேலாண்மை இதனைச் சேவையாகத் திறம்படச் செய்யும் ஒருவருக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தருகிறது. இலாப விகிதம் அதிகமாகத் தோன்றினாலும் இதைக் குறைக்கும் காரணிகள் அதிகம் உள்ளன.

பிற மருத்துவசேவை மையங்கள்

பிற மருத்துவசேவை மையங்கள்

நிகர இலாபம்:12.6%
உடல் நலம் ஒரு நல்ல வருவாய் ஈட்டித் தரும் தொழில். உடல் நலம் சார்த்த எண்ணற்ற சேவைகள் உள்ள எங்கள் பட்டியல் மூலம் இது மேலும் புலனாகிறது. அதிகப் பணம் கொடுத்தால் நல்ல மருத்துவச் சேவை கிடைக்கும் என்ற மக்களின் எண்ணம் தனியார் மருத்துவத்தை நோக்கி அவர்களைச் செல்லத் தூண்டுகிறது (இது எல்லா நேரங்களிலும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை)

 ரியல் எஸ்டேட் தொழில்

ரியல் எஸ்டேட் தொழில்

நிகர இலாபம் : 14.1%
நீங்கள் ஒரு வீட்டைத் தேடும்போது உங்களுக்கு உதவியாக இடைத்தரகர் அல்லது முகவர் தன்னால் இயன்ற அளவு அனைத்தையும் செய்து உங்களுக்கு மிகவும் அனுசரணையாக இருந்தாரா ? சும்மா இல்லீங்க அவருக்குச் சேரவேண்டிய கமிஷனுக்காக அவர் அதைச் செய்கிறார்.

பொது மருத்துவம்

பொது மருத்துவம்

நிகர இலாபம் : 14.1%
பெரும்பாலான உடல் நலம் சார்ந்த தொழில்கள் இந்தப் பட்டியலில் உலகிலேயே அதிகம் இலாபம் ஈட்டித் தரும் தொழில்களாகும். உங்கள் பெற்றோர் உங்களை டாக்டருக்குப் படிக்கச் சொன்னபோது உங்களுக்குப் நிச்சயம் பிடிக்காமல் இருந்திருக்கும். ஆனால் அதை நினைத்து இப்போது நிச்சயம் வருத்தப்படுவீர்கள்.

நிலம் மற்றும் கட்டிடக் குத்தகை

நிலம் மற்றும் கட்டிடக் குத்தகை

நிகர இலாபம்: 14.1%
ஒரு நிலம் அல்லது கட்டிடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கும் பட்சத்தில் அதனைக் குத்தகைக்கு விட்டு வருவாய்க்கு வழி செய்துகொள்வது ஒரு சிறந்த முடிவாக இருக்கும்.

பல் மருத்துவம்

பல் மருத்துவம்

நிகர இலாபம் : 14.9%
இது ஒரு புதிரான சற்று மூக்கைப் பிடிக்கச் செய்யும் வேலை என்றாலும் யாராவது ஒருவர் அதைச் செய்தாக வேண்டும். பல் மருத்துவர்கள் மருத்துவர்களே அல்ல என்று அடிக்கடி கேலிக்குள்ளாவதுண்டு. ஆனால் தற்போது புன்னகையை அவர்களிடம் தான் காணமுடிகிறது.

கருவிகள் வாடகை மற்றும் குத்தகை (லீஸ்)

கருவிகள் வாடகை மற்றும் குத்தகை (லீஸ்)

நிகர இலாபம்: 16.4%
அனைவரும் நிலச் சொந்தக்காரர்களாக மாற நினைக்கும் நேரத்தில் நிலச் சொந்தக்காரர்கள் கருவிகளைக் குத்தகைக்கு விடுபவர்களாக உள்ளனர். அல்லது மிக அதிக விலைமதிப்புடைய ஒன்று அல்லது இருமுறை மட்டுமே உபயோகப்படும் கருவிகளை வாடகைக்கு விட்டால் நல்ல வாய்ப்புகள் உண்டு என்பதை இவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தல்

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தல்

நிகர இலாபம்: 16.4%
இது மிகவும் ஆபத்தான வேலை. ஆனால் நல்ல வருவாயை நம்பமுடியாத அளவிற்கு ஈட்டித் தரக்கூடியது. தொடக்கத் தொழில்களில் இது மட்டுமே இந்தப் பட்டியலில் முன்னிலையில் இடம் பிடித்துள்ளது.

சட்டப் பணிகள்

சட்டப் பணிகள்

நிகர இலாபம் :17.8%
வழக்கறிஞர்கள் தங்கள் மனசாட்சியை விற்றுவிட்டுத் தொழில் செய்பவர்களாக இருக்கலாம். ஆனால் அதை அவர்கள் குறைந்த கூலிக்குச் செய்துவிடுவதில்லை. சட்டத் தொழில் துறை மிகவும் பரந்த அதன் நிழல் படாத இடமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அனைத்திலும் தொடர்புடைய ஒன்று. இந்த உண்மை சட்டத் துறை தொழில் செய்பவர்களால் நன்கு உணரப்பட்டு அதற்கென அவர்கள் ஒரு பெரும் தொகையை விலையாகப் பெறுகிறார்கள்.

கணக்குச் சேவைகள்

கணக்குச் சேவைகள்

நிகர இலாபம் : 19.8%
பல்வேறு வகையான கணக்கு மற்றும் தணிக்கை சேவைகள் இந்தத் துறையை உலகிலேயே மிகவும் இலாப மிக்கத் தொழிலாக மாற்றியுள்ளது. நீங்கள் புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால் கணக்கு, வரி மதிப்பீடு, பதிவேட்டுப் பணிகள் மற்றும் சம்பளக் கணக்குச் சேவைகள் ஆகியவை சரியான தேர்வாக இருக்கும்.

அது நீங்கள் பணத்தைக் கணக்கிடுவதற்காகப் பணத்தைப் ஈட்டும் ஒரு எளிய வேலை. இதன் மற்றுமொரு கவர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், பணியாளர்களுக்கான தேவை இங்கு எப்போதுமே உண்டு என்பதுடன் வேலைக் கிடைக்க நீங்கள் நீண்ட நாள் காத்திருக்கவும் வேண்டியதில்லை

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 Most Profitable Industries in the World

If you ever wondered what is the best industry to be in, our list of most profitable industries in the world will give you the answer. Maybe it isn’t too late to change your career choice after all.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X