ரூ.500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க தயாராகிறது பிளிப்கார்ட்.. தோல்வியின் பயமோ..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: ஈகாமர்ஸ் சந்தையில் முடி சூடா மண்ணாகத் திகழும் பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த சில மாதங்களாக அமேசான் நிறுவனத்தின் ஆதிக்கத்தால் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருகிறது.

இந்நிலையில் நிதி மற்றும் வர்த்தகத் தேவைக்காக 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பிளிப்கார்ட், BCCL நிறுவனத்திடம் விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது பிளிப்கார்ட் நிறுவனத்தின் தோல்வியின் பயமாக இருக்குமோ..?

மதிப்பீடு குறைவு

மதிப்பீடு குறைவு

இந்திய சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பீடு அதிகளவில் குறைந்துள்ளதால், பன்னாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டைப் பெற இந்நிறுவனம் திணறி வருகிறது.

நிதித் தேவை

நிதித் தேவை

இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை செய்யப்படும் பங்குகள் மூலம் கணிசமான நிதியைத் திரட்ட முடியும் எனத் திட்டமிட்டுள்ளதாக ஈகாமர்ஸ் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பென்னெட், கோல்மேன் அண்ட் கோ லிமிடெட்

பென்னெட், கோல்மேன் அண்ட் கோ லிமிடெட்

டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் தாய் நிறுவனம் தான் இந்தப் பென்னெட், கோல்மேன் அண்ட் கோ லிமிடெட்.

முதல் முறை பங்கு விற்பனை

முதல் முறை பங்கு விற்பனை

முதலீட்டாளர்களை மட்டுமே நம்பி வர்த்தகம் செய்து வந்த பிளிப்கார்ட் முதல் முறையாக வர்த்தகம் மற்றும் விளம்பரத்திற்காகத் தனது நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

அமேசான்

அமேசான்

இந்தியாவில் ஏற்கனவே 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டு இருந்த அமேசான் தற்போது 5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் பிறகே பிளிப்கார்ட் தனது பங்கு விற்பனை குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. இது தோல்வியின் பயமோ..?

 

நிறுவனங்கள் பேச்சுவார்த்தை

நிறுவனங்கள் பேச்சுவார்த்தை

இந்த 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனைக்குப் பிளிப்கார்ட், BCCL நிறுவனத்திடம் இருந்து கணிசமான தொகையும், அதிகளவிலான விளம்பரமும் பெற உள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை இரு நிறுவனங்கள் மத்தியிலும் துவங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

என்ன லாபம்

என்ன லாபம்

பிளிப்கார்ட் தனது பங்குகளை BCCL நிறுவனத்திற்கு விற்பனை செய்வதன் மூலம், இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் பட்டியலில் BCCL நிறுவனம் இடம்பெறும். இதுமட்டும் அல்லாமல் குறைந்த விலைக்கு விளம்பர சேவையை BCCL நிறுவனத்திடம் இருந்து பிளிப்கார்ட் பெற முடியும்.

ஓரே கல்லின் இரண்டு மாங்காய்..

 

15 பில்லியன் டாலர்

15 பில்லியன் டாலர்

தற்போது இந்திய சந்தையில் மட்டும் வர்த்தகம் செய்து வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 15 பில்லியன் டாலர். இதில் BCCL நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும் பங்குகளின் அளவு வெறும் 0.5 சதவீதம் தான்.

 பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

BCCL நிறுவனத்தின் முதலீட்டு நிறுவனமான பிரான்டு கேபிடல், விளம்பரத்திற்குப் பங்கு விற்பனை என்ற வகையில் ஏற்கனவே ஸ்னாப்டீல் மற்றும் குவிக்கர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், பிளிப்கார்ட் 3வது நிறுவனமாகும்.

 

லாபம் குறைவு..

லாபம் குறைவு..

இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் அதிரடி வளர்ச்சிகளின் மூலம் பிளிப்கார்ட் வர்த்தகத்தை இழந்தது மட்டும் அல்லாமல் அதிரடி தள்ளுபடிகள் மூலம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்த வருகிறது.

ரிட்டன் பாலிஸி

ரிட்டன் பாலிஸி

இணையத்தில் வாங்கிய பொருட்களைப் பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது தரம் குறைவாக இருந்தாலோ 30 நாட்களுள் பிளிப்கார்ட் நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். இதுவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக மக்கள் மத்தியில் விளங்கியது.

இந்நிலையில் தற்போது தனது திரும்பப் பெறும் கொள்கையை அதாவது, ரிட்டன் பாலிஸியை மாற்றியுள்ளது.

 

10 நாட்கள் மட்டுமே

10 நாட்கள் மட்டுமே

ஆர்டர் செய்த பொருட்களை வாடிக்கையாளர் விருப்பத்தின் பெயரில் 30 நாட்களுக்குள் திரும்பப்பெற்று வந்த பிளிப்கார்ட் இனி 10 நாட்களுக்குள்ளான காலகட்டத்தில் மட்டுமே திரும்பப்பெற உள்ளதாக அறிவித்துள்ளது.

விற்பனையாளர்கள் கமிஷன்

விற்பனையாளர்கள் கமிஷன்

அதுமட்டும் அல்லாமல் பிளிப்கார்ட், அமேசான் போன்ற விற்பனை தளங்களைப் பயன்படுத்தி இணையத்தில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் இந்நிறுவனங்களுக்குத் தங்களின் விற்பனை அளவுகளைப் பொருத்து கமிஷன் அளிக்க வேண்டும்.

இந்தக் கமிஷன் அளவைச் சமீபத்தில் அமேசான் உயர்த்திய நிலையில் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது கமிஷன் அளவை உயர்த்தியுள்ளது.

 

கமிஷன்

கமிஷன்

அதிகக் கமிஷன் பெறுவதன் மூலம் நஷ்டத்தில் செயல்படும் பிளிப்கார்ட் கணிசமான லாபத்தை அடையும் எனத் திட்டமிட்டு கமிஷன் அளவை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் தற்போது பிளிப்கார்ட் தனது கமிஷன் அளவை 9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

 

ரி ட்டன் பாலிஸி

ரி ட்டன் பாலிஸி

ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் தாக்கத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்து நிற்கும் பிளிப்கார்ட், தனது ரிட்டன் பாலிஸியை 30 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைத்த நிலையில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.

ஆனால் இந்த 10 நாள் ரிட்டன் பாலிஸி மாற்றம் அனைத்துப் பொருட்களுக்கு அல்லாமல் பிளிப்கார்ட் தளத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகம் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றுக்கும் மட்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

பிற பொருட்கள்

பிற பொருட்கள்

ஆடைகள், காலணிகள், கைக்கடிகாரம் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் மற்றும் பிற பேஷன் அணிகலன்களுக்கு 30 நாள் ரிட்டன் பாலிசி பொருந்தும் எனவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

ஓரே வழி தள்ளுபடி..!

ஓரே வழி தள்ளுபடி..!

உயிர் வாழத் தள்ளுபடி தான் ஓரே வழி.. ஈகாமர்ஸ் நிறுவனங்களின் உண்மை நிலை..!உயிர் வாழத் தள்ளுபடி தான் ஓரே வழி.. ஈகாமர்ஸ் நிறுவனங்களின் உண்மை நிலை..!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart To Sell Stake Worth Rs 500 Crore To BCCL

India's largest e-commerce firm Flipkart Ltd is negotiating the sale of a stake in the company to Bennett, Coleman and Co. Ltd (BCCL) in a 500 crore deal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X