ஆடம்பர சந்தையில் பளபளக்கும் ஆடை நிறுவனங்கள்..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: அபிமான நிறுவனங்கள் தயாரிக்கும் நேர்த்தியான ஆடைகளை உடுத்துவது இன்றைய வாழ்க்கையில் மக்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். மக்கள் தங்களது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நேரம் செலவிடுவதுடன், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக உடை உடுத்த ஏராளமான பணத்தைச் செலவிடவும் தயங்குவதில்லை.

 

சக மனிதர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பதற்கான ஆசை மற்றும் உள்ளுணர்வு, அவர்களை அடிக்கடி மிகவும் விலையுயர்ந்த ஆடைகளைத் தேர்வு செய்யத் தூண்டுகின்றது.

உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பேஷன் பிரியர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் மிகவும் விலை உயர்ந்த டாப் 10 ஆடை பிராண்டுகளே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். இந்தப்பட்டியலில் இருக்கும் பிராண்டில் உங்கள் அலமாரியில் ஆடைகள் உள்ளதா..?

10. வாலண்டினா

10. வாலண்டினா

இந்தப் பிராண்ட்டின் அழகிய மற்றும் நாகரீகமாக வடிவமைப்புகள், பெண்களைத் தன்பால் ஈர்க்கும் ஒரு சாமர்த்தியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பேஷன் பிரியர்களுக்கான சொத்தாக மாறிவிட்டன. இதனுடைய அற்புதமான படைப்புகள், உலகின் தலைசிறந்த மற்றும் மிகவும் விலையுயர்ந்த பத்து ஆடைகள் பிராண்டுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

இதனுடைய சிறப்பு வாய்ந்த மாலை நேர உடைகள், இதை ஒரு சிறந்த மற்றும் பிரபலமான பிராண்டாக மாற்றியுள்ளது. இதனுடைய அசரடிக்கும் வடிவமைப்பு, ஆடம்பரத்தை விரும்பும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த, நவீன ஃபேஷனை விரும்பும் பெண்களைப் பெரிதும் ஈர்க்கின்றது.

 

9. வெர்சேஸ்

9. வெர்சேஸ்

இத்தாலிய ஃபேஷன் பிராண்டான வெர்சேஸ், ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சமமாக நவீன வடிவமைப்புகளைத் தயாரிக்கிறது. இது சமீபத்திய பேஷன் விரும்பிகள், மற்றும் சிறந்த தரம் மிகுந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக இருப்பவர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தப் பிராண்ட் தனனுடைய போட்டியாளர்களுக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக் கொடுக்காமல், பல்வேறு ஃபேஷன் உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான பேஷன் வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் வெர்சேஸ்ஸை, ஒரு பருவகால ஆடை பிராண்ட்டாகப் பரிந்துரைக்கின்றனர். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடை மற்றும் மற்ற பிற ஃபேஷன் பொருட்களை வழங்கும் ஒரு சிறந்த ஃபேஷன் பிராண்ட் ஆகும். இன்று, ஆடம்பர ஆடை வடிவமைப்பில் புகழின் உச்சத்தில் இருக்கும் இது, தற்பொழுது உபகரணங்கள், மேக்கப் பொருட்கள், மற்றும் புதிய தளபாடங்கள் (பர்னிச்சர்கள்) போன்றவற்றையும் தயாரித்து வருகின்றது.

8. கஸ்
 

8. கஸ்

கஸ் ஒரு அமெரிக்கப் பிராண்ட் ஆகும். இதனுடைய டெனிம் ஜீன்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இது எப்போதும் வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிராண்ட்களின் ஒன்றாகவே இருந்து வருகின்றது.

இது பெரும்பாலும் அதன் பொருட்களைக் குறிப்பாக வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்டு தயாரித்து வருகின்றது. இதனுடைய ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட்கள் இளைஞர்கள் மற்றும் பேஷன் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

 

7. டியோர்

7. டியோர்

டியோர், அதன் மிகவும் சிக்கலான, கவர்ச்சி, நளினம், நவீன மற்றும் கவுரவத்திற்கான ஆடை வடிவமைப்பிற்காக அறியப்படுகிறது. இதனுடைய தரமான மற்றும் சமீபத்திய ஃபேஷன் போக்குகளைப் பிரதிபலிக்கும் ஆடைகள் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மிகவும் விலையுயர்ந்த இந்தப் பிராண்ட் பொருட்கள் ஃபேஷன் துறையில் இருக்கும் பெண்களைப் பெரிதும் கவர்கிறது.

மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தப் பிராண்டின் புகழ், அது வாசனைத் திரவியங்கள், பைகள், சூரியன் கண்ணாடி, பெண்களுக்கான துணிவகைகள், மற்றும் பல்வேறு புதிய தயாரிப்புகளைச் சத்தைப்படுத்திய பின் மேலும் அதிகரித்துள்ளது. இது பல்வேறு பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த போதிலும், இதனுடைய பெண்களுக்கான துணி பர்ஸ், மற்றும் கைப்பைகள், இந்தப் பிராண்டிற்குப் பெரும் புகழை பெற்றுத் தந்துள்ளன.

 

6. மார்க் ஜேக்கப்ஸ்

6. மார்க் ஜேக்கப்ஸ்

பருவகால வேறுபாடுகள், ஆடம்பரமான வடிவமைப்புகள், மற்றும் பிரத்தியேக விற்பனை போன்றவை, இந்தப் பிராண்டின் சில முக்கிய அம்சங்களாக உள்ளன. நீண்ட காலமாக நாகரீகமான ஆடைகளுக்காக அறியப்படும் இந்தப் பிராண்ட், தற்பொழுது நகை, கைப்பைகள் மற்றும் காலணிகள் போன்றவற்றில் முக்கியமாகக் கவனம் செலுத்துகின்றது.

அதோடு இல்லாமல், இது பல்வேறு பருவங்களில் பயன்படுத்தக்கூடிய வெளிப்புற உடைகளை வழங்குகிறது. இந்தப் பிராண்டின் முக்கிய நன்மை என்பது இது ஆடை வடிவமைப்பில் பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாகும்.

 

5. ஆர்மாணி

5. ஆர்மாணி

ஆர்மணி, மிகவும் விலையுயர்ந்த ஆடைகள் பிராண்ட்டாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பிராண்ட்டாக உள்ளது. இந்தப் பிராண்டில் உள்ளது போன்று பல்வகைப் பொருட்கள் வேறு எந்தப் பிராண்டிலும் இல்லை. ஆர்மணி வாசனைத் திரவியங்கள் தொடங்கி மற்றும் ஆடைகள் வரை இந்தப் பிராண்டில் உள்ளது. துணி உற்பத்தியில் குறிப்பாக ஜீன்ஸ், மற்றும் டி-ஷர்ட் உற்பத்தியாளர்கள் மத்தியில் இது மிகவும் பழமையான பிராண்டாக உள்ளது.

இந்தப் பிராண்டின் ஆடை வடிவமைப்புகள் உலகின் சிறந்த பேஷன் வடிவமைப்பாளர்கள் மற்றும் பூட்டிக் கடைகள் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் அதிகமாக விற்கும் பிராண்டாக இருக்கின்றது. பெரிய பருவகால மாறுபாடுகளில், ஆர்மணி ஆடைகளே அந்தந்த பருவங்களில் விரும்பப்படும் சிறந்த பிராண்டாக இருக்கின்றது. ஆர்மணி இப்போது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றது.

 

4. டோல்ஸ் மற்றும் கபானா

4. டோல்ஸ் மற்றும் கபானா

பொதுவாக டி & ஜி என அழைக்கப்படும், டோல்ஸ் மற்றும் கபானா பிராண்டுகளின் புகழ் மற்றும் வீச்சை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது இத்தாலிய கலாச்சாரத்தில் மிகவும் விரும்பப்படும் மற்றும் மிகவும் பிரபலமான ஆடை பிராண்ட் ஆகும். அதன் தயாரிப்புகள் ஆண்கள் மற்றும் பெண்களால் சமமாக விரும்பப்பட்டு, உலகம் முழுவதும் பெரும் எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன. இந்தப் பிராண்டின் ஆடை மற்றும் அச்சு அமைப்பு முறையின் தரம் உலகப் புகழ் பெற்றது. டி & ஜி 2013 ல் உலகின் மிக விலையுயர்ந்த ஆடை பிராண்ட் ஆக இருந்தது.

3. பிராடா

3. பிராடா

நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு மாற்றம் தர விரும்பினால் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இத்தாலிய பிராண்ட் நவநாகரீக ஆடைகள் இளம் பேஷன் காதலர்களைப் பெரிய அளவில் ஈர்க்கின்றது. இதற்கு உலகம் முழுவதும் விற்பனையகங்கள் உள்ளன.

எனவே இது பெரும்பாலும் மற்ற பிராண்டுகளை விட எளிதாகக் கிடைக்கின்றது. இதன் தயாரிப்புகள் உலகின் மிக விலையுயர்ந்த ஆடை தயாரிப்புகளாக உள்ளன. இது தன்னுடைய எளிய வடிவமைப்பு, தனித்தன்மை மற்றும் வசதிக்காகப் புகழ்பெற்று விளங்குகின்றது. இதனுடைய வாசனை திரவியங்களும் சந்தையில் புகழ்பெற்று விளங்குகின்றன.

 

2. சேனல்

2. சேனல்

சேனல் பிராண்டுகள், மிகப் பெரும் தேவை உள்ள பிராண்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் பிரபலங்கள் மற்றும் பணக்காரர்களால் விரும்பப்படுகின்றது. ஸ்டைலான மற்றும் சிறந்த வடிவமைப்புகளைச் சேனல் பிராண்டுகள் கொண்டிருப்பதால், நீங்கள் பல்வேறு வகைகளில் இருந்து உங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யலாம்.

இந்த வகைப் பிராண்ட்களின் ஆடைகள் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இந்தப் பிராண்ட் ஆடைகள் மற்ற பிராண்ட் ஆடைகளின் வடிவங்களை நகல் எடுப்பது இல்லை. தோல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் அழகு பொருட்கள் கூடச் சேனல் பெயரில் வெளியிடப்படுகின்றது. இந்தப் பிராண்ட் அநேகமாகப் புதிய ட்ரெண்டை விரும்புவார்கள், இளைஞர்கள், மற்றும் பேஷன் பிரியர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது. ஏனெனில் இது உலகின் மிகவும் பிரபலமான பேஷன் பிராண்ட் ஆகும்.

 

1. குஸ்ஸி

1. குஸ்ஸி

இதனுடைய விலையும், ஒட்டு மொத்த தரமும், பிரசித்தி பெற்ற இத்தாலிய பிராண்டான குஸ்ஸியை, முதலிடத்தில் வைத்துள்ளது. இந்தப் பிராண்ட் ஆடைகளே உலகின் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. குஸ்ஸி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைக்கின்றது.

இவர்கள், டை, கைப்பைகள், குட்டைப்பாவாடைகள், காலணிகள், மற்றும் பயணத்திற்குரிய பெட்டிகளைத் தயாரிக்கின்றார்கள். இந்தப் பிராண்டின் விலை அதிகமாக இருந்தாலும், இந்தப் பிராண்ட் பொருட்கள் எப்போதும் ஆடம்பரமாக, மற்றும் ஸ்டைலாக உள்ளன. இதற்குப் பல போட்டியாளர்கள் இருந்த போதிலும், யாராலும் இதை முதலிடத்தில் இருந்து இறக்க முடியவில்லை.

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

சுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..! 

தமிழ் குட்ரிட்டன்ஶ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஶ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

இந்திய மக்களின் விருப்பம்..!

இந்திய மக்களின் விருப்பம்..!

<strong>வேலைன்னு சேர்ந்தா இந்தக் கம்பனியில் தான் சேரனும்.. இந்திய மக்களின் விருப்பம்..!</strong>வேலைன்னு சேர்ந்தா இந்தக் கம்பனியில் தான் சேரனும்.. இந்திய மக்களின் விருப்பம்..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Most Expensive Clothing Brands

The instinct of being different from others often leads them not to hesitate from paying high prices over selection of clothes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X