வேலைன்னு சேர்ந்தா இந்தக் கம்பனியில் தான் சேரனும்.. இந்திய மக்களின் விருப்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: சில வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பற்றிய LinkedIn நிறுவனம், இந்திய மக்கள் மத்தியில் அதிகம் விரும்பும் ஐடி நிறுவனங்கள் என்ற தலைப்பில் ஒரு சுவாரஸ்யமான ஆய்வைச் செய்தது.

 

தொழில் வல்லுநர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்தச் சமுகவலைத்தளத்தில் 433 மில்லியன் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களைப் பட்டியிலிட்டு, நீங்கள் வேலை செய்ய விரும்பும் ஐடி நிறுவனங்கள் எவை என்று LinkedIn நிறுவனம் தனது இந்திய உறுப்பினர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

இதுவே இன்றைய நடைமுறையில் இந்திய மக்கள் வேலைக்குச் சேர வேண்டும் என்றும் அதிகம் விரும்பத்தக்க நிறுவனமாகப் பார்க்கப்படுகிறது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்


LinkedIn நிறுவனம் செய்த ஆய்வில் 25 நிறுவனங்கள் உள்ளது இதில் தொழில்நுட்பத்தைச் சார்ந்த நிறுவனங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

நீங்கள் பணிபுரியும் நிறுவனம் இதில் உள்ளதா..?

 

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

16 தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்ட இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்.

பிளிப்கார்ட் நிறுவனம் மைந்திரா நிறுவனத்தின் கைப்பற்றுதலுக்குப் பின் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைந்து வருகிறது.

 

அமேசான்

அமேசான்

தொழில்நுட்பத்திலும் சரி, ஈகாமர்ஸ் வர்த்தகத்திலும் சரி அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைந்து வருகிறது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைந்ததால், இந்தியாவில் தனது முதலீட்டை 5 பில்லியன் டாலர் வரை உயர்த்தியுள்ளது அமேசான்.

கேப்ஜெமினி
 

கேப்ஜெமினி

ஐரோப்பிய சந்தையில் மென்பொருள் வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வந்த கேப்ஜெமினி ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் இறங்க ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியது. இதனால் உலகளவிலான வர்த்தகத்தில் கேப்ஜெமினி கலக்கி வருகிறது.

இதனால் தொழில் வல்லுநர்கள் மத்தியில் கேப்ஜெமினி நிறுவனத்திற்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது. இதனால் 16 நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது கேப்ஜெமினி.

 

கூகிள்

கூகிள்

எப்போது மக்கள் அதிகம் விரும்பும் கூகிள் நிறுவனம் LinkedIn செய்த ஆய்வில் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அடோப்

அடோப்

கிராபிக்ஸ், அனிமேஷன், மென்பொருள் சேவை எனப் பல துறைகளில் கலக்கி வரும் அலோப் நிறுவனம் இந்த ஆய்வில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது.

எச்சிஎல்

எச்சிஎல்

யாரும் எதிர்பார்க்காத வகையில் LinkedIn நிறுவனம் செய்த ஆய்வில் எச்சிஎல் நிறுவனம் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஹவுசிங்.காம்

ஹவுசிங்.காம்

சிஇஓ வெளியேற்றம், ஊழியர்கள் வெளியேற்றம், உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம் எனப் பல சர்ச்சைகளில் ஹவுசிங்.காம் நிறுவனம் சிக்கினாலும், இந்திய மக்கள் மத்தியில் ஹவுசிங்.காம் நிறுவனத்தில் சேர வேண்டும் என ஆர்வம் அதிகளவில் உள்ளது.

ஓலா

ஓலா

ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா கடந்த சில வருடங்களாக அதிகளவிலான வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற்று வருகிறது இதனால், தொழில் வல்லுனர்கள் மத்தியில் இந்நிறுவனத்தில் இணைய வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

பிளிப்கார்ட் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்த நிலையில் தனது சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

கூகிள் நிறுவனமே 4வது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. காரணம் இத்தகை நிறுவனங்களில் வேலைக்குச் சேர்வது எளிதான காரியமில்லை இதன் காரணமாகக் கூட மக்கள் பார்வையில் கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் எட்டாக் கனியாக இருக்கிறது.

டாடா கம்யூனிகேஷன்ஸ்

டாடா கம்யூனிகேஷன்ஸ்

டாடா குழுமத்தில் அதிக லாபம் பெறும் நிறுவனங்களில் ஒன்றான டாடா கம்யூனிகேஷன்ஸ் இப்பட்டியலில் 11வது இடத்தைப் பெற்று அசத்துகிறது.

விப்ரோ

விப்ரோ

இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முக்கிய நிறுவனமான விப்ரோ தற்போது அபித் அலி நீமுச்வாலா தலைமையில் இயங்கி வருகிறது. இதனால் தொழில் வல்லுனர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மீதான வளர்ச்சியில் அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். இதன் எதிரொலியாகவே விப்ரோ 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

அக்சென்சர்

அக்சென்சர்

இந்திய சந்தையை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் அக்சென்சூர் நிறுவனமும் இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

மேக் மை டிரிப்

மேக் மை டிரிப்

இந்தியாவில் ஆன்லைன் சேவைகளுக்கான சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் ஹோட்டல், பஸ், ரயில், விமானம் டிக்கெட் புக்கிங் சேவைகளை அளிக்கும் மேக் மை டிரிப் இந்திய மக்கள் பங்குபெற்ற இந்த ஆய்வில் 14வது இடத்தைப் பெற்றுள்ளது.

சிஸ்கோ

சிஸ்கோ

கோடிகளில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகம் கொண்ட சிஸ்கோ நிறுவனம் கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போலவே 15வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

16வது இடம்

16வது இடம்

உணவு விரும்பிகளுக்குச் சிறப்பான ஆன்லைன் உணவு மற்றும் உணவக சேவையை வழங்கும் சோமேட்டோ நிறுவனம் 16வது இடத்தைப்பிடித்துள்ளது.

தெறித்து ஓடும் ஐடி நிறுவனங்கள்

தெறித்து ஓடும் ஐடி நிறுவனங்கள்

<strong>அரசு திட்டங்களே வேண்டாம்.. தெறித்து ஓடும் இந்திய ஐடி நிறுவனங்கள்..!</strong>அரசு திட்டங்களே வேண்டாம்.. தெறித்து ஓடும் இந்திய ஐடி நிறுவனங்கள்..!

 

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

‪உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

16 'most attractive' IT companies in India

LinkedIn has announced it’s first-ever 'Top Attractors' list, culled from data of the company's 433 million-plus members. The list names "most sought-after workplaces" today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X