மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% சம்பள உயர்வு.. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 7வது சம்பள கமிஷன் அமலாக்கத்திற்காக ஆர்வமுடன் காத்துக்கிடக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி. பி.கே சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற செயலாளர்கள் அமைப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்து நிதியமைச்சகத்திடம் இறுதி பரிந்துரையைச் சமர்ப்பித்துள்ளது.

 

இந்நிலையில் நிதியமைச்சகம் பரிந்துரைகளை ஆய்வு செய்து ஜூன் 29ஆம் தேதி அதாவது, நாளை இதுகுறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிட உள்ளது. இதனால் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் கூடிய விரைவில் செய்யப்படும் எனத் தெரிகிறது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

நாடாளுமன்ற செயலாளர்கள் அமைப்பு அளித்த பரிந்துரையின் படி பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவு சேர்ந்து 23.55 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேபோல் மத்திய அரசு சார்ந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றோர் 24 சதவீதம் அளவிலான ஓய்வூதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

நாடாளுமன்ற செயலாளர்கள் அமைப்பு அளித்த பரிந்துரையை நிதியமைச்சகம் அமலாக்கம் செய்தால் 48 லட்சம் அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதுகுறித்து உறுதியான மற்றும் இறுதி முடிவுகள் நாளை நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிடும்.

 

கூடுதல் சுமை
 

கூடுதல் சுமை

7வது சம்பள கமிஷன் ஜனவரி 1, 2016ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் செய்யப்படுவதன் மூலம் மத்திய அரசுக்கு 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவுகள் ஏற்பட உள்ளது. ஆனால் இந்தச் சம்பள உயர்வு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி 7வது சம்பள கமிஷனில் இருக்கும் முக்கியமான பரிந்துரைகளைப் பார்ப்போமா..?

 

குறைந்தபட்ச ஊதியம்

குறைந்தபட்ச ஊதியம்

நிதியமைச்சகம் அளித்த பரிந்துரையின் படி குறைந்தபட்ச ஊதியத்தை 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவு மற்றும் சம்பளம்

கொடுப்பனவு மற்றும் சம்பளம்

அடைப்படை சம்பளத்தில் 16 சதவீதம் உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவில் 138.71 சதவீத உயர்வு, இதர கொடுப்பனவில் 49.79 சதவீத உயர்வு, ஓய்வூதியத்தில் 23.63 சதவீத உயர்வு ஆகியவை பி.கே சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற செயலாளர்கள் அடக்கிய அமைப்பு நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள்

இந்திய ராணுவ படையில் துவக்க பதவியான சப்பாய் பதவியில் இருக்கும் வீரர்களுக்கான மாத வருமானத்தை 8460 ரூபாயில் இருந்து 21,700 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், உயர் பதவியான லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிக்கு மாத 2,00,000 ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரக் காப்பீடு

சுகாதாரக் காப்பீடு

அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குச் சுகாதாரக் காப்பீடு கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

OROP

OROP

மேலும் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமான ஓன் ரேங் ஓன் பென்ஷன் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஜூன் 29

ஜூன் 29

நாளை இதுகுறித்து அனைத்து முடிவுகள் மற்றும் அறிவிப்புகளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

சுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cabinet to take up pay panel proposal on 29th

The much-anticipated Seventh Pay Commission bonanza for the government employees is likely soon with the Union Cabinet set to consider the panel's recommendations on Wednesday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X