டைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குனர் செர்க்ஸெஸ் தேசாய் காலமானார்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் முன்னணி கைக்கடிகார தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குனரான செர்க்ஸெஸ் தேசாய் காலமானார்.

 

இந்தியாவில் முதல் முறையாகக் கூவாட்ஸ் கடிகாரத்தை 30 வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்தி மிகப்பெரிய புரட்சியைச் செய்த செர்க்ஸெஸ் தேசாய் தனது 79வயதில் டெங்கு காய்ச்சல் காரணமாக உடல்நலம் குன்றி இயற்கை ஏய்தினார். | நியூஸ்லெட்டர்

 
டைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குனர் செர்க்ஸெஸ் தேசாய் காலமானார்

நாட்டின் டைட்டன் அறிமுகத்திற்குப் பின் ரீடைல் சந்தையின் உருவமே முழுமையாக மாறியது குறிப்பிடத்தக்கது. இதன் பின் தனிஷ்க் ஷோரூம்கள் இந்தியா முழுவதும் திறக்கப்பட்டது.

செர்க்ஸெஸ் தேசாய் தனது பட்டப்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு 1961ஆம் ஆண்டு டாடா நிர்வாகச் சேவையில் (TAS) இணைந்தார்.

டைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குனர் செர்க்ஸெஸ் தேசாய் காலமானார்

தமிழ்நாடு அரசின் உதவியுடன் 1986ஆம் ஆண்டு டைட்டன் நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன் செர்க்ஸெஸ் தேசாய் டாடா பிரஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் தாஜ் ஹோட்டல்ஸ் போன்ற பல்வேறு முக்கிய வர்த்தகப் பிரிவுகளில் பணியாற்றினார்.

டைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குனர் செர்க்ஸெஸ் தேசாய் காலமானார்

டைட்டன் நிறுவனத்தைத் துவங்கிய சில வருடங்களிலேயே மத்திய அரசின் வாட்ச் தயாரிப்பு நிறுவனமான ஹெச்எம்டி நிறுவனத்தை விடவும் அதிகமான வர்த்தகம் மற்றும் வருவாய்ப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவே டைட்டன் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் செர்க்ஸெஸ் தேசாய் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.| நியூஸ்லெட்டர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: titan டைட்டன்
English summary

Titan's founding MD Xerxes Desai dies at 79

Xerxes Desai, the first managing director of India's largest watch maker Titan, passed away on Monday after a brief illness.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?