7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 48 லட்சம் அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடையும் 7வது சம்பள கமிஷன் குறித்த பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவின் பரித்துரைக்கு மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவின் இறுதிக்கட்ட பரிந்துரைகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சகம் நம்பிக்கை

நிதியமைச்சகம் நம்பிக்கை

2017ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை 32 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அறிவித்தார்.

பி.கே.சின்ஹா

பி.கே.சின்ஹா

இந்நிலையில் பி.கே.சின்ஹா தலைமையிலான குழு நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவு சேர்ந்து 23.55 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கவும், மத்திய அரசு சார்ந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றோர் 24 சதவீதம் அளவிலான ஓய்வூதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் பரிந்துரை செய்திருந்தது.

நிதிப் பற்றாக்குறை
 

நிதிப் பற்றாக்குறை

7வது சம்பள கமிஷன் அமலாக்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகள் நடப்பு நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறையான 3.5 சதவீதத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் துறை

மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் அறிக்கையை அமலாக்கம் செய்த பின் இந்தியாவில் வாகன விற்பனை குறிப்பாக கார் விற்பனை, வீட்டு மனைகள் விற்பனை ஆகியவை உயரும். பல மாதங்களாக சரிவில் தத்தளிக்கும் ரியல் எஸ்டேட் துறை 7வது சம்பள கமிஷன் ஒப்புதல் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

சம்பள கமிஷன் அமலாக்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் செலவு என்றாலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்த விரிவாக்கத்திற்கு இது அடித்தளமாக இருக்கும்.

வங்கிகள்

வங்கிகள்

இதனால் வங்கிகளின் வீட்டுக் கடன், வாகன கடன், அடமானக்கடன், என பல வகையில் வர்த்தகம் அதிகரிக்கும். இதுவே வங்கிகளில் வராக்கடன் அளவை குறைக்க மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

7வது சம்பள கமிஷன் குறித்த முழுமையான விபரம்.7வது சம்பள கமிஷன் குறித்த முழுமையான விபரம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cabinet approves rise in salaries, pension for government employees

The Cabinet on Wednesday approved a proposal to revise upwards salaries and pensions for government employees, an official, privy to the decision, told reporters.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X