அம்போன்னு சுற்றியவர்களையும் அம்பானியாக மாற்றிய சினிமா..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தொழில்னாலே ரிஸ்க் ஒரு உடன்பிறப்பு மாதிரி கூடவே வரும்னு உங்களுக்குத் தெரியுமே. என்னதான் நாம சொந்தமா மனசு நிறைவோடு செஞ்சாலும் தலைக்கு மேலே ஒரு கத்தி எப்பவும் தொங்கிக் கிட்டே இருக்குறமாதிரி இருக்கத்தான் செய்யுது என்ன பண்ண? சரி விடுங்க.

பிசினஸ் பண்ணுறதுக்கு ஆசை இருந்தா மட்டும் போதாது. நல்ல சிந்திக்கிற திறன், முன்னெச்சரிக்கை, சமயோஜிதம், விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் அச்சமின்மை அப்படின்னு பல விசயங்கள் தேவைப்படுது. இதையெல்லாம் கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கும் ஆனா ரொம்ப யோசிச்சா ஒன்னும் பிடிபடாது.

அப்படிப் பட்டவங்களுக்காகவே ரெடியா செஞ்சு வச்ச அல்வா மாதிரி ஒரு வழி இருக்கு அது தான் சினிமா.

சினிமா

சினிமா

தமிழர்கள் மிகப்பெரிய பொழுதுபோக்காகப் பார்ப்பது சினிமா. திரைப்படங்களைப் பார்த்து பல விஷயங்களை உணர்ந்துள்ளோம். இதை வைத்தே நாம் ஒரு தொழில் துவங்குவது எப்படி..? அதில் வரும் சவால்களை எதிர்கொள்வது, வாடிக்கையாளர்களைக் கவர்வது என்பது போன்ற பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

ப்ரீ அட்வைஸ்

ப்ரீ அட்வைஸ்

அப்படிப் பட்ட தொழில் சார்ந்த திரைப்படங்கள் பற்றித் தான் நாம் இப்போ பாக்கப் போறொம். இந்தப் படங்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல உங்களுக்கு உற்சாகமூட்டி, உங்களுக்குத் தேவயான ஆலோசனைகளைத் தந்து உங்களுக்குக் கண்டிப்பா உதவும் அப்படீன்னு நாங்க நிச்சயமா நம்புறோம். என்ன ரெடியா? வாங்க பாக்கலாம்.

ஸ்டார்டப்.காம்

ஸ்டார்டப்.காம்

2001 ஆண்டு வெளியான இந்த ஆவனப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூவ்வொர்க்ஸ்.காம் (GovWorks.com) என்ற புதிய நிறுவனத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சியைப் பற்றியது. பெரும் பரபரப்பும் முதலீடும் கொண்டிருந்த இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் உட்பூசல்களையும் அதீத வளர்ச்சியின் பாதகங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஏன் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்? ஏனென்றால், இதில் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் இதில் நிறைய இருக்கின்றன. புதிதாகத் தொழில் தொடங்குவோர்க்கு தங்களுடைய தொழில் கூட்டாளிகள் ஒத்துபோகவில்லையெண்றால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கிறது. தொழிலுக்குத் தேவையான நிதியைப் பெற்றவுடன் அதை எவ்வாறு திட்டமிட்டு நிர்வகிப்பது என்பதை அறிந்துகொள்ளவது இதில் இரண்டாவதாக நாம் தெரிந்துகொள்ளலாம்..

 

ஃப்ளாஷ் ஆஃப் ஜீனியஸ்

ஃப்ளாஷ் ஆஃப் ஜீனியஸ்

கார்களில் பொருத்தப்படும் கண்ணாடித் துடைப்பான்களைக் கண்டுபிடித்த பாப் கீர்ன்ஸ் - இன் வேடத்தில் க்ரெக் கின்னீர் நடித்திருக்கிறார். டெட்றாய்டின் வாகன உற்பத்தியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை வரவேற்ற போதிலும் கீர்ன்ஸுக்கு அதற்குண்டான பெருமை கிடைக்கவில்லை. அவர் எவ்வாறு இந்தப் பெருநிறுவனங்களுடன் போராடுகிறார் என்பது படம் முழுதும் நீளும் மீதிக்கதை..

இப்படத்தில் என்ன சிறப்பு? மற்றவர்களின் வாழ்க்கையில் உதவக்கூடிய ஒரு நல்ல உக்தியைக் கண்டுபிடித்து வைத்துக் கொண்டு அதற்குண்டான புகழும் எதிர்காலமும் இல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்பதும் அந்தக் கண்டுபிடிப்பை சட்டப்படி அறிவுசார் உரிமை மூலம் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் இந்தப் படத்தின் மூலம் உணர முடியும்.

 

கோஸ்ஃபோர்ட் பார்க்

கோஸ்ஃபோர்ட் பார்க்

ராபர்ட் ஆல்ட்மன்னின் இந்த 2001 ஆம் ஆண்டு மர்மக் கதை அவ்வளவு சிறந்த தேர்வாக இல்லாவிட்டாலும் இது உங்களைச் சுவாரசியத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் ஒரு நல்ல பொழுதுபோக்குச் சித்திரம்.

சரி ஏன் எந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்? வாடிக்கையாளர் சேவை போன்ற ஒன்றின் மூலம் மக்களை மகிழ்விப்பது ஒரு வியாபாரத்தின் முக்கியப் பகுதி. ஹெலன் மிர்ரனின் திருமதி வில்சன் இதைக் கச்சிதமாகக் கூறியிருப்பார். "எந்த ஒரு சிறந்த பரிசு ஒரு நல்ல வேலையாளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்?. அது எதிர்பார்க்க வைப்பது. நான் ஒரு நல்ல வேலையாள். ஒரு நல்ல வேலையாளை விடச் சிறந்தவள். நான் மிகச் சிறந்தவள். நான் ஒரு பொருத்தமான வேலையாள். எனக்கு அவர்களுக்கு எப்போது பசிக்கும் என்பது தெரியும், உணவும் தயாராக இருக்கும். அவர்கள் எப்போது சோர்வாக உள்ளார்கள் என்பது தெரியும் அதனால் சரியான நேரத்தில் கட்டிலைப் போடுவேன். அவர்கள் அதை அறியும் முன்னரே அதை நான் அறிந்துகொள்வேன்.

 

ஸ்டீவ் ஜாப்ஸ் – ஒன் லாஸ்ட் திங்

ஸ்டீவ் ஜாப்ஸ் – ஒன் லாஸ்ட் திங்

பிபீஎஸ் இந்தக் குறும்படத்தை 2011 இல் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த சில நாட்களில் வெளியிட்டது. இது உலகின் உன்னதமான ஒரு தொழில் முனைபவரை அவர் எட்டிய உயரங்கள் மற்றும் அவர் சந்தித்த சவால்கள் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டியது. ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில் மற்றும் வாழ்க்கை குறித்துப் போதுமான அளவு அறிந்து கொள்வது மிகவும் கடினம் என்று கூறுமளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

தி காட்ஃபாதர்

தி காட்ஃபாதர்

அனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டிய இன்னொரு படம் இது. 1972 ஆம் ஆண்டு வெளிவந்த பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா வின் இந்த அற்புதப் படைப்பு சினிமா உலக வரலாற்றில் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று.

இதனை அவசியம் பார்க்கவேண்டும் எனச் சொல்லக் காரணம், ஒரு திட்டமிடப்பட்ட சதிவேலைகளைப் பற்றிய படம் என்பது ஒருபுறமிருக்கட்டும்.

மைக்கேல் கார்லியோன் (அல் பாசினொ) எவ்வாறு ஒரு சிறு குடும்பத் தொழிலை எடுத்துக் கொண்டு அதனை எவ்வாறு ஒரு சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிகுந்த குடும்பமாக மாற்றுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் காட்ஃபாதர் படம் உச்சத்தை அடைவது எப்படி மற்றும் அதனைத் தக்கவைத்துக் கொள்வது எவ்வாறு என்பதைக் கனகச்சிதமாக எடுத்துரைக்கும்.

 

ரிஸ்கி பிசினஸ்

ரிஸ்கி பிசினஸ்

1983 ஆம் ஆண்டு ஒரு பட்டன் அவிழ்த்த சட்டையையும் ஒரு ஜோடி சாக்ஸையும் போட்டுக் கொண்டு டாம் குரூயிஸ் மேடையில் சருக்கிச் சென்று புகழ் மிக்கப் பாப் இசை பிரபலமானார். அவர் அந்த நல்ல தருணங்களை அனுபவிக்கும் வேளையில் அவர் தன் தந்தையின் போர்ஷ் காரை விபத்தில் நொறுக்கிவிடுகிறார். இது அவரின் மகிழ்ச்சியான வாழ்க்கை கையை விட்டுப் போகச் செய்கிறது.

ஜோயலாக நடிக்கும் குரூயிஸ் தன் தந்தையின் காரை சரிசெய்ய எப்படி விரைவாகப் பணம் சேர்ப்பது என்பதை யோசிக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறார். சில நெருக்கடியான நேரங்கள் எவ்வாறு நமக்கு நல்ல புதிய வழிகளைக் காட்டும் என்பதற்கு இது உதாரணம்.

 

பியர் வார்ஸ்

பியர் வார்ஸ்

இந்த 2009 ஆம் ஆண்டுக் குறும்படம் ஒரு நண்பர்கள் குழு எவ்வாறு தங்கள் சொந்தத் தயாரிப்புப் பீரை அறிமுகம் செய்து பெரும் மதுபான நிறுவனங்களைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்களை விளக்கும் சுவாரசியமான படம்.

ஒரு நன்கு முன்னேறிய சந்தையில் நுழைந்து வெற்றி பெறுவது மிகவும் சவாலான விஷயம். எனினும், மற்ற பொருட்களை விட உங்கள் தயாரிப்பு எவ்வாறு சிறந்தது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறுவது பியர் வார்ஸ் படம் நமக்குத் தரும் ஒரு நல்ல பாடம்.

 

அப் இன் தி ஏர்

அப் இன் தி ஏர்

2009 ஆம் ஆண்டின் இந்தப் படத்தில் ஜார்ஜ் க்லூனி மற்றும் ஆன்னா கென்றிக் ஜோடி மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்தப் படம் நாடு முழுவதும் பயணம் செய்து மக்களைப் பணி நீக்கம் செய்யும் வேலைக்காக அமர்த்தப் படும் ரியான் பிங்காம் எனும் பாத்திரத்தில் கவனம் செலுத்துகிறது. கென்றிக் நாடாலி கீனர் என்னும் பாத்திரத்தில் நடித்து ரியான் பிங்காமின் தந்திரங்களை எவ்வாறு தொழில் நுட்பம் கொண்டு ஜெயிக்கிறார் என்பதைக் காட்டியிருப்பார்கள்.

க்லூனியின் பாத்திரம் மிகவும் திறமையானது மட்டுமல்ல, பணி நீக்கம் செய்யக் காரணமானவர்களை உட்படுத்தாமல் செய்யும் கடினமான வேலையும் கூட. எனினும் அப் இன் தி ஏர் படத்தின் முக்கியப் பாடம், ஒரு வியாபாரத்தை அதனைச் சரி செய்ய முயலும் முன் நன்கு புரிந்து கொள்வது சிறப்பான ஒன்று என்பது. அதைத் தான் கென்றிக் கடைசியில் புரிந்து கொள்வார்.

 

செஷன் 9

செஷன் 9

2001 ஆம் ஆண்டின் இந்தப் பயமுறுத்தும் மர்மக் கதை, அஸ்பெஸ்டாஸ் ஓடுகளை நீக்கும் தொழிலைச் செய்யும் ஒருவர் சர்ச்சைக்குரிய ஒரு கைவிடப்பட்ட மன நல மருத்துவமனைப் பணியைக் கையிலெடுக்கிறார்.

ஃபில் (டேவிட் கருசோ) தலைமையில் இயங்கும் இந்தக் குழு அப்போது நெஞ்சைப் பதை பதைக்க வைக்கும் மற்றும் நடுங்க வைக்கும் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறது. படம் சொல்லும் பாடம் என்னவென்றால், சில நேரங்களில் பணம் பெரிதென்றாலும், சில வேலைகளை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

 

கால் ஆப் தி என்ட்ரப்ரணர்

கால் ஆப் தி என்ட்ரப்ரணர்

ஈர்ப்பைத் தரக்கூடிய இந்த 2007 ஆம் ஆண்டுக் குறும்படம் ஒரு வங்கி அதிபர், ஒரு தோற்கும் பால் பண்ணை விவசாயி மற்றும் கம்யூனிச சீனாவில் இருந்து வந்த ஒரு அகதி ஆகிய மூன்றுபேரைச் சுற்றி வரும்.

இதை ஏன் பார்க்கவேண்டும் என்றால், இந்த மூன்று வெவ்வேறு திசைகளில் இருந்து வந்தவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க எவ்வாறு ஆபத்துக்களை எதிர் கொள்கிறார்கள் என்பதை மிக ஆர்வத்துடன் விவரித்திருப்பார்கள். அவர்களால் முடியுமென்றால், நம்மால் முடியாதா என்ன?

 

காக்டெய்ல்

காக்டெய்ல்

டாம் குரூயிஸின் இந்தப் படம் நமக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த 1988 ஆம் ஆண்டுப் படம் இளம் கதா நாயகன் பிரியன் ஃப்ளனாகன் மற்றும் அவனது கனவான சொந்த பார் ஒன்றை பல்வேறு சிக்கல்களுக்கிடையே திறப்பதைப் பற்றியது.

படத்தில் அப்படி என்ன பெரிதாக? தொழில் துவங்குபவர்களுக்கு அது ஒரு நல்ல பொழுதுபோக்கு. ஆனால் ஒரு தொழில் முனைபவராகக் காக்டெயிலை விரும்புவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. புதியவர்களுக்காக, ஃப்ளனாகன் புத்தகங்கள், தொழில் முறை வகுப்புகள், தொழில் துவங்க உதவும் வழிகாட்டிகள் போன்றவற்றின் மூலம் எடுத்துரைக்கிறார்.

ஆனால், உண்மையில் ஒரு பாரின் பின்னணியில் இருந்து வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நகரின் சிறந்த பார் டெண்டராக மாறுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வது சுவாரசியமான ஒன்று. அவருக்கு வழிகாட்டியாகவும் அவரை உருவாக்குபவராகவும் வரும் பாத்திரம் தயங்காமல் வியாபார நுணுக்கங்களையும் உலகம் நடைமுறையில் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளும் என்பதையும் கற்றுக் கொடுப்பார்.

 

அக்டோபர் ஸ்கை

அக்டோபர் ஸ்கை

ஹோமர் ஹிக்மன் பாத்திரத்தில் நடிக்கும் ஜே கில்லென்ஹால் மற்றும் அவரது நண்பர்கள் புகழ்மிக்க ஸ்புட்னிக் ராக்கெட் செலுத்தப்பட்ட பிறகு தாமும் சொந்தமாக ஒரு ராக்கெட்டை உருவாக்க ஆசைப்படுகிறார்கள். துரதிருஷ்டவசமாக, அவர்கள் சொந்த ஊரில் அவர்களைச் சுரங்கத் தொழிலாளர்களாக மாற்றும் சூழல் நிலவியதால் அவர்களுக்குத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் தங்கள் ஆசையில் அவர்கள் கொண்ட குறிக்கோள் மற்றும் அவர்களின் ஆசிரியை (லாரா டெர்ன்) உதவியுடன் அவர்கள் தங்கள் நட்சத்திர இலக்கை அடைகிறார்கள்.

உங்கள் கனவு எதுவாக இருப்பினும் அதனைத் தொடர்ந்துகொண்டே இருங்கள். உங்களுக்குத் தேவைப்படும் அந்த ஒரு சிறிய ஊக்கத்தைக் கொடுக்கும் ஒரு நல்ல வழிகாட்டி இருந்தால் நீங்கள் வழிதவறிப் போவதற்கு வாய்ப்பே இல்லை.

 

டாம்மி பாய்

டாம்மி பாய்

தன் தந்தையை இழந்த டாம்மி காலஹான் (கிரிஸ் ஃபார்லி) மற்றும் வேலை செய்ய மறுக்கும் தொழிலாளி (டேவிட் ஸ்பேட்) இருவரும் இணைந்து தங்கள் குடும்பத் தொழிலை பாதுகாத்துக் கொள்ள விழைகிறார்கள். அங்கே நடக்கும் சம்பவங்கள் மற்றும் கூத்துக்கள் எனச் சுவாரசியத்திற்குக் குறைவில்லை. ஆனால் டாம்மி பாய் நிறையக் கற்றுத் தரவும் செய்கிறது.

டாம்மி எப்போதும் முயற்சியைக் கைவிடுவதில்லை. சூழ்நிலை எதுவானாலும் சரி. எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்த நிலையிலும், தன்னுடைய திறமைகளை இனம் கண்டு ஒவ்வொரு நாளும் எவ்வாறு சமாளிக்கிறான் என்பது ஆர்வமூட்டுவதாக உள்ளது. ஒரு தொழில் முனைபவராக எப்போதும் முயற்சியைக் கைவிடத் துடிக்கும் நமகு இது ஒரு நல்ல பாடம். எனவே முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செல்லுங்கள்.

 

சம்திங் வென்சர்ட்

சம்திங் வென்சர்ட்

2011 ஆம் ஆண்டின் இந்தக் குறும்படம் சிலிகன் வேலி-யில் தொடர்புடைய ஒரு முதலீட்டாளரின் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டது.

முதலீட்டிற்காகப் பணம் வேண்டி முயற்சிப்பவர்கள் வென்சர் காபிடலிசம் எனப்படும் துணிவு மிக்க முதலீடுகளைக் குறித்து அறியவும் அதன் சிந்தனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் இது உதவும்.

 

பாய்லர் ரூம்

பாய்லர் ரூம்

வால் ஸ்ட்ரீட்-இன் ஒரு மேம்படுத்தப் பட்ட வெளியீடாக இந்தப் படத்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஒரு எதிர்காலத்திற்காகக் குறிப்பாகப் பங்குச் சந்தைகள் தொடர்பான பரிவர்த்தனைகளில் மக்கள் எத்தனை தூரம் செல்கிறார்கள் என்பதை இது தெளிவாகச் சித்தரிக்கிறது. படம் முடியும்போது, சேத் டேவிஸ் (ஜியோவான்னி ரிபிசி) மற்றவர்களின் கடின உழைப்பில் கிடைத்த பணத்தின் மூலம் நாம் எதிர்காலத்தைத் அமைத்துக் கொள்வது சரியாகாது என்பதை உணர்கிறார்.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதும் பணத்தைச் சம்பாதிப்பதில் சாதித்துவிட்டல் அனைத்தையும் சாதித்ததாகாது என்பதையும் பாய்லர் ரூம் படம் விளக்குகிறது. எனினும் இப்படம், உங்கள் உள்ளே இருக்கும் குறிக்கோளை நோக்கிச் செயல்படும் ஒரு நல்ல விற்பனையாளனை வெளிக் கொணரவும் செய்கிறது. இந்தப்படம் ஒரு நல்ல தலைவன் எவ்வளவு சக்திவாய்ந்தவனாகவும் தன் செயலில் மரியாதை கொண்டவனாகவும் இருக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. பென் அஃப்லெக் படையினரைச் சுற்றி வளைப்பதைக் கவனியுங்கள்.

 

ஊல்ப் ஆஃப் வால் ஸ்டிரீட்

ஊல்ப் ஆஃப் வால் ஸ்டிரீட்

பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்தால் எப்படி லாபத்தைச் சம்பாதிக்க முடியும், அதேபோல் பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்களை இப்படம் மக்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது.

அதேபோல் பணம் வந்தால் ஒரு மனிதன் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இப்படம் மிகப்பெரிய உதாரணம்.

 

 

பைரேட்ஸ் ஆஃப் சிலிக்கான் வேலி

பைரேட்ஸ் ஆஃப் சிலிக்கான் வேலி

கம்பியூட்டர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகும் நேரத்தில் ஐபிஎம் நிறுவனத்திற்கு முக்கியப் போட்டியாளராக உருவான ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுவனத்தின் ஆப்பிள் நிறுவனம் அதன் வளர்ச்சி பாதையை இப்படம் மிகச் சிறப்பாகக் காட்டியுள்ளது.

அதேபோல் இதேகாலக்கட்டத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் நண்பராக நுழையும் பில் கேட்ஸ் செய்யும் வில்லாதி வில்லன் வேளைகளையும் இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

 

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

என்னடா இது எல்லாம் ஆங்கிலப் படமாகவே இருக்கு..? தமிழில் சதுரங்க வேட்டை இப்பட்டியலில் மிகமுக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதில் காந்திபாபு செய்யும் வேலை அனைத்தும் அரசு, மக்களை ஏமாற்றும் செயலாக இருந்தாலும், ஒரு வாடிக்கையாளரை எப்படிக் கவர வேண்டும், நம் தொழிலை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Movies That Inspire Entrepreneurship

18 Movies That Inspire Entrepreneurship lesson all time.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X