இனி ஐடி நிறுவனங்களால் குறைந்த வேலைவாய்ப்புகள் மட்டுமே கொடுக்க முடியும்: நாஸ்காம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய ஐடித்துறைக்கு 2009 ஆண்டு மறக்க முடியாத ஒரு கருப்புப் பக்கம். இந்த மோசமான ரெசிஷன் காலத்திற்குப் பின் ஐடி துறை சிறப்பான நிலையில் பயணித்தது, இப்போது இந்நிலை முழுமையாக மாறிவிட்டது. அப்போ மீண்டும் ரெசிஷன் வருமா என்றால்..? ஆம். ஆனால் கொஞ்சம் மாறுபட்ட முறையில் வரும்.

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் கல்லூரி வளாக நேர்முகத்தேர்வில் தான் அதிகளவிலான பணியாளர்களை நிறுவனத்தில் சேர்ப்பது வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் 2016ஆம் ஆண்டில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர்கள் தேர்ந்தடுக்கப்படுவார்கள் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

16 லட்சம் மாணவர்கள்

16 லட்சம் மாணவர்கள்

இந்தியாவில் ஒவ்வொரு வரும் 16 லட்சம் பட்டதாரிகள் பட்டம் பெற்றுக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றனர். இதில் ஐடி நிறுவனங்கள் மட்டும் ஒரு வருடத்திற்குச் சுமார் 2 லட்ச பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது.

2016ஆம் ஆண்டும் இதேபோல் 2 லட்சம் மாணவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

உலகளவில் இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி சேவை பெற்ம் பன்னாட்டு நிறுவனங்களும் ஐடி சேவைக்காகச் செலவிடுவதை அதிகளவில் குறைத்து வருகின்றனர். இதனால் ஐடி நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை விட இருக்கும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதிலும், அவர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதில் கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதனால் கல்லூரியில் இருந்து நேரடியாக ஐடி நிறுவனத்தில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக நாஸ்காம் ஆர்.சந்திரசேகரன் கூறினார்.

இதற்கு முக்கியக் காரணம் ஆட்டோமேஷன்

 

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

இதனுடன் துவக்க பணியாளர்கள் (Fresher's) செய்யும் 80 சதவீன மென்பொருள் பணிகள் தற்போது ஆட்டோமேஷன் செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ளது. இதுவே ஐடி நிறுவனங்களின் மனமாற்றத்திற்கு முக்கியக் காரணம்.

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளராக இருந்து பல முன்னணி நிறுவனங்கள் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றவாறு ஊழியர்களின் திறன் மேம்படுத்துதல், benchஇல் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் எனப் பல நடவடிக்கைகளைச் செய்து வருகிறது.

டிசிஎஸ், இன்போசிஸ், சிடிஎஸ்

டிசிஎஸ், இன்போசிஸ், சிடிஎஸ்

இந்திய மென்பொருள் சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுமே தற்போது Zero bench பார்மூலாவை அமல்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்பாட்டு விகிதம்

பயன்பாட்டு விகிதம்

கடந்த 3 வருடத்தில் ஊழியர்களின் பயன்பாட்டு விகிதம் சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் சந்திரசேகரன் கூறினார். அதாவது ஒரு ஊழியரை நிறுவனத்தில் எவ்வளவு தூர பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைக் கணக்கிடம் ஒரு அளவீடு.

மாணவர்கள்

மாணவர்கள்

இத்தகைய சூழ்நிலையால் மாணவர்கள் கவலை அடைய வேண்டாம். சந்தையில் ஸ்டார்ட்அப், புதிய நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பம் எனப் பல்வேறு வழிகள் உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பிற்குப் பஞ்சம் இருக்காது எனவும் சந்திரசேகரன் தெரிவித்தார்.

முன்னணி நிறுவனங்கள் ஓட்டம்

முன்னணி நிறுவனங்கள் ஓட்டம்

இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக விளங்கும் 160 பில்லியன் டாலர் மதிப்புடைய தகவல் தொழில்நுட்ப துறை, வரலாற்றில் காணாத மிகவும் மோசமான வர்த்தக நிலையை நடப்பு நிதியாண்டில் சந்தித்துள்ளது.

இந்நிலையில் சிட்டி குரூப், டார்கெட் கார்ப், ஆர்பிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களின் செயல்பாட்டு முறை மற்றும் ஊழியர்களுக்கு மையப்படுத்தி வருமானம் பெரும் செயல்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் வெளியேறியுள்ளது.

 

அவுட்சோர்சிங்

அவுட்சோர்சிங்

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை அளிக்கும் போது, ஊழியர்களை அவுட்சோர்சிங் என்ற பெயரில் பிராஜெட் முடியும் வரை தாரைவாக்கும். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தைச் சந்தித்தது.

பணம் மட்டும் அல்ல..

பணம் மட்டும் அல்ல..

இந்நிலையில் சிட்டி குரூப், டார்கெட் கார்ப், ஆர்பிஎஸ், லோவிஸ் மற்றும் கார்கில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் கூறுகையில், இந்திய ஐடி நிறுவனங்கள் பன்னாட்டுத் திட்டங்களைக் கையில் வைத்துக்கொள்ளக் கட்டணங்களில் சலுகை அளிப்பதை விட்டுவிட்டு மேற்கத்திய நாடுகளுக்கு இணையான செயல்முறை கொண்டு வர வேண்டும்.

மேலும் முக்கியத் தொழில்நுட்பத்தில் வல்லுநர்கள் மற்றும் புதிய ஐடியாக்களை உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

பார்வையில் மாற்றம்...

பார்வையில் மாற்றம்...

கடந்த சில வருடங்களாக இந்திய நிறுவனங்களும் சரி, பன்னாட்டு நிறுவனங்களும் சரி நீண்ட கால வளர்ச்சி மற்றும் சேவையை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளனர்.

இதனால் பல நிறுவனங்கள் அவுட்சேர்சிங் முறையில் வெறுக்கத் துவங்கியுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் இந்திய ஐடி நிறுவனங்கள் கேட்கும் மிகப்பெரிய விலை.

 

பட்டதாரிகள்

பட்டதாரிகள்

நான்கு வருடம் முட்டி மோதி பட்டம் பெற்ற இன்ஜினியரிங் மாணவனின் சராசரி சம்பளம், பள்ளிக் கல்வி கூட முடிக்காத ஒரு எலக்டிரிஷியனின் மாத சம்பளத்தை விடக் குறைவு என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்திய நகரங்களில் பணிபுரியும் இன்றைய தலைமுறையினர்களில் அனுபவமற்ற எலக்டிரிஷியனின் மாத சம்பளம் 11,300 ரூபாய். ஆனால் இன்ஜினியரிங் முடித்து விட்டு டெஸ்க்டாப் இன்ஜினியர் ஆகப் பணிபுரிபவருக்கு வெறும் 3,500 ரூபாய் சம்பளம்.

 

டீம்லீஸ்

டீம்லீஸ்

2015ஆம் ஆண்டு டீம்லீஸ் நிறுவனம் செய்த ஆய்வில், இன்றைய நிலையில் அனுபவம் கிடைத்தாலும் இன்ஜினியரிங் பட்டதாரிக்கும் எலக்டிரிஷியனுக்கும் சம்பளத்தில் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை என்று டீம்லீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐடி துறையில் சராசரியாக 5 வருடத்தில் 19,000 ரூபாய்,8 வருடத்தில் 30,000 ரூபாய் சம்பளம் பெற முடியும். இதே காலகட்டத்தில் எலக்டிரிஷியன் 26,000 மாத வருமானமாகப் பெறுகிறான் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

6 வருடங்களில்

6 வருடங்களில்

கடந்த 6 முதல் 7 வருடங்களில் எலக்டிரிஷியன், பிட்டர், வெல்டர், ப்லம்பர் ஆகியோரின் சம்பளம் கடுமையாக உயர்ந்துள்ளது, குறிப்பாக நகரப்புறங்களில். ஆனால் ஐடி பிரஷ்ர்களின் சம்பளம் அப்படியே தான் உள்ளது என டீம்லீஸ் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்தியாவில் ஐடி துறை வளரத் துவங்கி சுமார் 15 வருடங்கள் ஆகிறது, இந்நிலையில் இங்குத் தேவைக்கு அதிகமான ஆட்கள் உள்ளதாலும், பட்டதாரிகளின் அறிவுத் திறன் மற்றும் நிறுவன அளவீடு வேறுபட்டுள்ளதால் இவர்களுக்குச் சம்பளம் அதிரடியாகக் குறைந்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

கடந்த சில வருடங்களாகவே அதாவது 2009ஆம் ஆண்டுக்குப் பின் ஐடி நிறுவனங்கள் 2 லட்சம் என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து நிறுவனத்தில் பட்டதாரிகளைச் சேர்த்து வந்து. ஆனால் கடந்த 6 வருடங்களாகப் பிரஷ்ஷர் எனப்படும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்வு அளிக்கப்படவில்லை.

இந்த வருடமும் இதே நிலைதான். எவ்விதமான ஊதிய உயர்வும் எதிர்பார்க்க முடியாது எனச் சந்தை கணிப்புகள் கூறுகிறது.

 

இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்ன செய்கிறார்கள்??

இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்ன செய்கிறார்கள்??

இந்நிலையில் இன்ஜினியரிங் முடித்த பல பட்டதாரிகள் தங்களுக்கான வேலையில் இல்லாமல் பல தரப்பட்ட வேலையில் பல்லை கடித்துக்கொண்டு வேலை செய்கின்றனர். அதுபோக இன்று எந்தப் படிப்பை படித்தாலும் ஐடி நிறுவனத்தில் சேர்கின்றனர், அட பேஷன் டெக்னாலஜி முடித்தவர்கள் எல்லாம் இன்போசிஸ், சிடிஎஸ் நிறுவனத்தல இருக்காங்க..

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

<strong>6.4 லட்சம் வேலைவாய்ப்புகள் இழக்கும் ஐடித்துறை.. காரணம் 'ஆட்டோமேஷன்'..!</strong>6.4 லட்சம் வேலைவாய்ப்புகள் இழக்கும் ஐடித்துறை.. காரணம் 'ஆட்டோமேஷன்'..!

<strong>40% வேலைவாய்ப்பை விழுங்கும் 'ஆட்டோமேஷன்'.. சோகத்தில் முழ்கிய ஐடி ஊழியர்கள்..!</strong>40% வேலைவாய்ப்பை விழுங்கும் 'ஆட்டோமேஷன்'.. சோகத்தில் முழ்கிய ஐடி ஊழியர்கள்..!

<strong>மாணவர்களின் கனவில் மண்ணை போட்ட எல்&டி இன்போடெக்..!</strong>மாணவர்களின் கனவில் மண்ணை போட்ட எல்&டி இன்போடெக்..!

யூடியூப்

யூடியூப்

யூடியூப் மூலம் பல கோடிகள் சம்பாதிக்கலாம் தெரியுமா உங்களுக்கு..? அட உண்மையாக தான். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: campus interview money ஐடி
English summary

Engineering campus hiring may fall first time since 2009: Nasscom

For the first time since 2009, campus recruitment of grads could fall across engineering colleges as companies resort to automation of entry-level coding jobs and look at optimizing their bench strength.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X